Tuesday, September 10
Shadow

“தேவி”- திரை விமர்சனம் (அழகான ராட்சஸி RANK4.5 / 5)

நடிகர் பிரபுதேவா ஒரு மாடர்ன் பெண்ணைதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கோடு போட்டு வாழ்ந்து வருகிறார்.எதிர்பாராத விதமாக கிராமத்து பெண்ணான தேவியை(தமன்னா) திருமணம் செய்து வைக்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்னர் பிரபுதேவா தேவியை அழைத்துக்கொண்டு அவர் வாழும் மும்பைக்கு செல்கிறார்.அங்கு சென்ற பின்னர் தன் மனைவி தேவியின் நடையில் சில மாற்றங்களை கவனிக்கிறார். அது என்ன மாற்றம் என்று கவனித்து அந்த மாற்றம் என்வேன்றும் கண்டு பிடிக்கிறார்.

தன் மனைவி தேவியின் உடலில் ரூபி எனும் ஆவி புகுந்துள்ளது என்றும் ரூபியின் ஆசையை தன் மனைவி தேவி மூலம் அடைய நினைக்கிறது என்பதை கண்டு அறிகிறார்.

பிறகு என்ன தேவி உடலில் இருந்து எப்படி பிரபுதேவா, ரூபியை வெளியேற்றினார் என்பதே மீதிக்கதை.

பன்னிரண்டு ஆண்டுகள் பிறகு நடிக்க வரும் பிரபுதேவா அன்று எப்படி பார்த்தோமோ அப்படியே இன்றும் அதே இளமை துள்ளல் நடனம் இப்படி ஒரு நடனம் பார்த்து அடேங்கப்பா பிரபுதேவா பிரபுதேவா தான் இவரை அடித்துக்கொள்ள யாரும் இல்லை நடனத்தில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் சரி காமெடியிலும் அப்படி சும்மா பின்னி எடுக்கிறார் அப்படி அப்படி ஒரு ஸ்டைல்

தமன்னா தான் படத்துக்கு மிக பெரிய ப்ளஸ் என்று சொல்லணும் இரண்டு கதாபாத்திரம் கிராமத்து தேவியாகட்டும் மும்பை ரூபியாக இருக்கட்டும் சும்மா நடிப்பில் அசத்தியுள்ளார் என்று சொல்லணும் பாகுபலி படத்துக்கு பிறகு தமன்னக்கு கிடைத்த மிக பெரிய படம் தாவது நடிப்பில் சும்மா அசத்தியுள்ளார் அதேபோல் கொஞ்சம் இல்லை நிறைய கிளாமர் ஆனால் ஆபாசம் இல்லை ரசிக்கவைக்குறது என்று தான் சொல்லணும்

பிரபுதேவா நண்பராக வரும் ஆர்.ஜே பாலாஜி படத்துக்கு மேலும் பிளஸ் என்று சொல்லணும் அளவுக்கு மிஞ்சாமல் அமிர்த்தமாய் காமெடி ரசிக்கும் அளவுக்கு பிரபுதேவாவுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்கவைகிறது

ருபி தமன்னாவை காதலிக்கும் சோனு சூன் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு தமிழில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். எப்போதும் வில்லனாக வரும் சூனு சூன் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறார் .

படத்தின் மேலும் ஒரு பிளஸ் என்றால் படத்தின் ஒளிப்பதிவுவாளர் மனுஷ் நந்தன் அற்புதமான ஒளிப்பதிவு காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்துள்ளார் .

பின்னனி இசை கோபி சுந்தர் படத்துக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் சும்மா பின்னணி இசை என்றா பெயரில் அரங்கத்தை கர்ஜிக்கவும் அலறவும் விடாமல் காட்சிக்கு ஏற்பமாதிரி இசை அருமை அதேபோல் பாடல்களும் ரசிக்க வைக்கிறது

பேய் படம் என்றால் தந்திர காட்சி இருந்தே ஆகும் அது பேய்கள் சும்மா எஸ்ஹ்ஹ புஸ்ஸ்என்று எல்லாம் இல்லாமல் ஒரே காட்சி ரசிக்க வைகிறார்கள்.

மூன்று மொழிகளிலு சேர்த்து 3000+ திரையரங்குகளில் இன்று பிரமாண்டமாய் வெளியானது. மாட்ரிக்ஸ் படத்தின் நாயகனின் தந்தை பால் ஆலன் இந்த படத்தின் கதையாசிரியர். விஜய் இயக்கிய சைவம் படத்தை பார்துவிட்டு உங்களுடன் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

மொத்தத்தில் தேவி அமைதியான அன்பான அழகான ரசிக்கும்படியான பேய் எல்லோரும் பார்க்க கூடிய பேய் என்று தான் சொல்லனும் இந்த படத்தி சிறந்த நடிப்பு நல்ல பொழுதுபோக்கு சிறந்த டான்ஸ் நல்ல பாடல்கள் ஆபாசம் இல்லாத காமெடி இப்படி எல்லாம் ரசிக்கும் படியான படம் என்று தான் சொல்லனும் எல்லோரும் குடும்பதொடு உங்க வீட்டு தேவியை பார்த்து ரசிங்க

RANK- 5/4.5

Leave a Reply