நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு இடையேயான சண்டை முற்றியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் எனலாம்.
ஆனால் சமீபமாக இந்த கூட்டணியில் இருந்து எந்த பாடலும் வெளிவரவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தாயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது இவை யாவும் அவர்களின் பிரிவை உறுதி செய்கிறது. மேலும் ஷான் ரோல்டனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெகுவாக புகழ்ந்து வருகிறார்.
எப்போதும் தனது படத்திற்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்யும் தனுஷ் ஏன் இப்போது ஒப்பந்தம் செய்யவில்லை என்று கேள்விகள் கோலிவுட்டில் உலா வருகின்றன.