நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய படம் என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
இந்நிலையில் சினிமா வீரன் எனும் பெயரில் இதே ஸ்டண்ட் கலைஞர்களை பற்றிய டாக்குமென்ட்ரி படம் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஸ்டன்ட் நடிகர்களுக்கு தேசிய விருது வழங்கவேண்டும் என்று சமீபத்தில் ஐஸ்வர்யா மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்த்தார். இப்ப ஐஸ்வர்யா தனுஷின் வேலையில்ல பட்டத்தாரி படத்தை இயக்கவும் போறார்.