Friday, December 6
Shadow

தனுஷ் வெளியிடும் விஜய் சேதுபதியின் “கவண்” டீசெர்

தனுஷ் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தில் நடித்து இருந்தார் விஜய் சேதுபதி.

இப்படம் விஜய்சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து வட சென்னை படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்துள்ள படம் கவண்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹாப்பி ஹாப்பி நியூ இயர் என்ற பாடலின் டீசரை நாளை 23ஆம் தேதி 7 மணிக்கு தனுஷ் வெளியிடவிருக்கிறாராம்.

இத்தகவலை கே.வி. ஆனந்த் தன் ட்விட்டரில் சற்றுமுன் பகிர்ந்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply