
தமிழ் சினிமாவில் சகலகலாவல்லவன் பட்டியலில் இடம் பிடித்துள்ள தனுஷ் நடிகன் பாடகர் தயாரிப்பாளர் வசனகர்த்தா இயக்குனர் பாடலாசிரியர் என்று பல அவதாரங்கள் எடுத்தவர் தமிழ் சினிமாவில் இருந்து முதலில் ஹாலிவுட் போன நடிகர் என்றால் அது ரஜினிகாந்த இப்ப அவர் மருமகன் தனுஷும் ஹாலிவுட் செல்வது நாம் அறிந்த விஷயமே ஆனால் இந்த படம் படபிடிப்பு தள்ளி போய்கொண்டே இருந்தது ஒரு வழியாக இந்த படத்தி படபிடிப்பு ஆரம்பமாக போகிறது .
தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் அதை பற்றி கூறும்போது;- “ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறேன். நன்றாக விற்பனையான ஒரு நாவலை படமாக பண்ணுகிறோம்.
அந்த இயக்குநர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது. இங்கு இருக்கும் நடிகர்கள் தேர்வு குழு “எங்கள் மனதில் ஒருவர் இருக்கிறார். நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். ஆனால், நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்” என அனுப்பி இருக்கிறார்கள். இவர்களும் என்னை மனதில் வைத்து அனுப்ப, இயக்குநரும் 10 படங்களையும் பார்த்துவிட்டு என்னை தேர்வு செய்திருக்கிறார்.
ஹாலிவுட் படத்தின் இயக்குநரும் நான் நடித்த முதல் படத்தில் இருந்து கடைசி படம் வரை அனைத்து படத்தையும் பார்த்திருக்கிறார். அதற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். லண்டனில் சந்தித்து பேசினோம். “இந்த படம் பண்ற என்பதை தவிர வேறு எதைப் பற்றியும் பேச நான் அனுமதிக்க மாட்டேன்” என்று தான் முதலில் சொன்னார்.
இந்த கதாபாத்திரத்துக்கு உன்னை தவிர வேறு எந்தொரு நடிகரையும் நினைக்க முடியவில்லை. நீ தான் செய்ய வேண்டும் என்றார்கள். நேரமின்மையால் லண்டனுக்கு செல்லும் போது விமானத்தில் தான் கதையை படித்துக் கொண்டே சென்றேன். எனக்கென்றே செய்த கதையைப் போலவே தெரிந்தது.” என கூறிஉள்ளார்.