பிரெஞ்ச் இயக்குநர் மர்ஜான் சத்ராபி இயக்கத்தில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாயின. தற்போது, இயக்குநருக்கும், தயாரிப்பு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால், இந்த படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மர்ஜான் சத்ராபி விலகியதால் அவர் அறிவித்திருந்த உமா தர்மன் இந்தப் படத்தில் நடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பெரனீஸ் பெஜோ நடிப்பார் எனத் தெரிகிறது. இவர் ‘தி ஆர்டிஸ்ட்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனுஷ், தான் இயக்கும் ‘பவர் பாண்டி’, நடித்து வரும் ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மற்றும் ‘வட சென்னை’ ஆகிய படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், மே மாதம் முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.