Friday, December 6
Shadow

இந்த கதைக்கு தனுஷ் தான் பொருத்தமான ஹீரோ சௌந்தர்யாவுக்கு ரஜினி

ரஜினி மகள் சவுந்தர்யா. ‘கோச்சடையான்’ அனிமேஷன் கேப்ட்சர் முறையிலான படம் இயக்கியவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார். இதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் தேடல் நடந்து வருகிறது.

நடிகர் மோகன்லால் மகன் பிரனவ். இவருக்கு சவுந்தர்யா படத்தில் நடிக்க வாய்ப்பு சென்றது.

ஏற்கனவே இவருக்கு மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சவுந்தர்யா தனது படத்தில் நடிக்க கேட்டு அணுகினார்.

பிரனவோ, தற்போதுள்ள சூழலில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

ஏற்கனவே மலையாள படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் அவர் அதுவே தனது முதல் படமாக இருப்பதால் முழுகவனமும் செலுத்த வேண்டி உள்ளது. நடிப்பைவிட இயக்குனர் ஆவதற்கே விருப்பம் என்பதால் தொடர்ச்சியாக வரும் பட வாய்ப்புகளை ஏற்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இப்படத்தின் கதையை தனுஷ் அமைத் திருக்கும் நிலையில் இது குறித்து தந்தை ரஜினியிடம் ஆலோசித்தார் சவுந்தர்யா.

கதையை கேட்ட ரஜினி, தனுஷுக்கு இக்கதை பொருத்தமாக இருக்கும் அவரையே ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறாராம்.

Leave a Reply