சென்ற ஆண்டு நான்கு படங்கள்து கொடுத்து அதில் மூன்று வெற்றியை கண்ட தனுஷ் இந்த வருடம் கொஞ்சம் இடைவெளிதான் அது மட்டும் ல்லமல் கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனத்திலும் மூன்று வெற்றி படங்கள் மட்டும் இல்லை உலக தரங்களுக்கு இணையானஅந்த அளவுக்கு விருதுகள் மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்த படம் என்று சொல்லணும் . துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி.
இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும் அணுமின் நிலையம்தான் இப்படத்தின் மையக்கரு என சொல்லப்படுகிறது.
‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
தற்போது இப்படத்தின் பிஸ்னஸும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷின் கேரியரில் இந்த படம்தான் அதிக தொகைக்கு விற்பனையாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் போஸ்டர்ஸ் குட இன்னும் வெளியிடவில்லை ஏன் புகை படங்கள் குட இன்னும் வெளியிடவில்லை.