நடிகர் தனுஷ் முதன் முதலாக ரெட்டை வேடத்தில் நடித்து இருக்கும் படம் “கொடி” இப்படம் முழுக்க முழுக்க அரசியல் சம்மந்த பட்ட படம் படத்தை எதிர் நீச்சல்,காக்கி சட்டை பட புகழ் துரை.செந்திகுமார் இயக்கி உள்ளார்
இந்த படத்தின் பாடல் வெளியீடு விழா இன்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது படத்தின் பாடல்கள்,ட்ரைலர் இன்று வெளியீடு செய்யப்பட்டது ஒரு வீடியோ பாடலும் திரை இடப்பட்டது வேட்டு போட்டு என தொடங்கும் பாடலின் வீடியோ திரை இடப்பட்டது பாடல் சும்மா தாறு மாறு அந்த பாடலில் அண்ணன் தம்பியாக நடித்து உள்ள தனுஷின் பாசம் வீரம் திறமை தன்மை ஆகியை குறியீடாக இடம் பெற்று உள்ளது
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் விவேக் கவி வரிகளில் சித்ரா ஷங்கர் மகாதேவன் தனுஷ் ஸ்வேதா இவர்கள் குரலில் பாடல் அனைத்தும் பிரமாதம்
மொத்தம் ஐந்து பாடல்கள்
“கொடி பறக்குதே”
அருண்ராஜா காமராஜ் மற்றும் தனுஷ் இருவரும் எழுதிய இந்த பாடல் படத்தின் மாஸ்டர் பீஸ் கபாலி நெருப்புடா ஸ்டைலில் வீர துறந்தாரா மாதிரி ஒரு பாடல் நல்ல ரேப் பாடல் என்றே குறிப்பிடலாம் கொடி பறக்கும் திரையரங்கில்
“ ஏய் சுழலி “
தன்னுடைய கற்பனை வளத்தை வரிகளில் ஏற்றி உள்ளார் பாடல் ஆசிரியர் விவேக். நிச்சயம் இந்த பாடல் இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இடம் பெரும், சந்தோஷ் அவர்களின் இசை மழையாய் கொட்டி உள்ளது வரிகள் ஒவ்வொன்றும் தென்றலாய் நீவி விடுகிறது “பொட்ட கோழி அழ(ல)குல என்ன கொத்தி அலையுற” இது ஒரு அருமையான மாஸ்டர் பீஸ் அப்டி தான் சொல்லணும்
“ஆரிராரோ”
தாலாட்டு என்றாலே தனி சுகம் தான் அதிலும் பாடல் முடிவில் சந்தோஷ் நாராயணன் சும்மா விளையாடி இருக்கார் பா ஏன்னா இசை கண்ணீர் துளி எட்டி பார்கிறது ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சித்ரா குரலில் அருமையான தாலாட்டு
“சிரிக்கி வாசம் காத்துல”
இந்த பாடலும் விவேக் எழுதிய பாடல் தான் எதில் எதிலோ அரசியல் பண்ணுவோம் ஆனால் இவரால் தான் காதலிலும் அரசியல் பண்ண முடியும் சிறப்பு ஒரு எழுத்தாளன் ஆகா இந்த பாடலில் நின்று உள்ளார் இதுவும் சிறந்த காதல் பாடல் உடல் வேணாம் உயிர் வேணாம் நீ மட்டும் போதும் என ஸ்வேதா ஆனந்தா கிருஷ்ணன் ஆகியோர் பாடி உள்ளனர் இந்த பாடலும் காற்றில் ரொம்ப நாள் பறக்கும்
“வேட்டு போட்டு”
ஒரு மாஸ் சாங் ஷங்கர் மகாதேவன் பாடி உள்ளார் இது ஒரு மாஸ் பாடல் இதையும் விவேக் எழுதி உள்ளார் இது அவர் எழுதும் முதல் மாஸ் பாடல் அவர் அதிகம் இது மாறி எழுதியது இல்லை ஆனால் இனி இனிமேல் அதிகம் எழுதார் காரணம் பாட்டு செம ஹிட்டு
மொத்தத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் இன்னும் ஒரு சிறந்த ஆல்பம் கொடி கொடி கொடி கொடி கொடி பறக்கும் வெடி வெடிக்கும் திரையரங்கில் காது பிளக்கும் விசில் சத்தத்தில்..,