
தனுஷ்ப ரசிகர்கள் மிகவும்ப ஆவலோடு எதிர்பார்க்கும் படம் தொடரி காரணம் மாரிக்கு பிறகு அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லாமல் திண்டாட்டதில் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் மட்டும் இல்லை சினிமா பிரியர்கள் எல்லோரும் எதிர் பார்க்கும் படம் காரணம் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் தான் முக்கிய காரணம் ஆங்கிலபடத்துக்கு நிகரான ட்ரைலர் மிகவும் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது .பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் தொடரி. இப்படத்தில் தனுஷ் பூச்சியப்பன் எனும் கதாபாத்திரத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், சரோஜா எனும் கதாபாத்திரத்தில் நடிகைக்கு மேக்கப் போடும் கேரள பெண்ணாக நடித்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 16ஆம்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படம் தொடர்பான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அஜித்துக்கு தனது குரல் பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார்.