Saturday, October 12
Shadow

தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் டோனி

ஒரு காலத்தில் இந்திப் படங்கள் தமிழ்நாட்டில் பெரிய வசூலைக் கொடுத்தன. இந்தியிலேயே வெளியான ஷோலே, குர்பானி, பாபி, போன்ற படங்கள் வசூலை குவித்தன. தற்போது இந்திப் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டாலும் அதிக வசூலை கொடுப்பதில்லை. கிரிஷ் வரிசை படங்கள் ஓரளவுக்கு வசூலாகும் அவ்வளவுதான். ஆனால் மீண்டும் சரித்திரம் திரும்புகிறது என்பதை போல கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த எம்.எஸ்.டோனி அன்டோல்ட்ஸ் ஸ்டோரி படம் தமிழ் நாட்டில் வசூலை குவித்து வருகிறது. நேரடி தமிழ் படம் போன்று தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது படம்.

டோனி வெளியான முதல் நாள் தமிழ்நாட்டில் 2 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த இந்திப் படமும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. நாளைக்குள் வசூல் 5 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் கொண்ட மாநிலம் என்பதாலும், அதிலும் டோனி ரசிகர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் என்பதாலும், தமிழ் டப்பிங்க அருமையாக செட் ஆகியிருப்பதாலும் இந்த வசூலை தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தே இருந்தார்கள். படமும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்திருப்பதால் டோனியின் வசூல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply