பூரி ஜெகன்நாத் இந்தியத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் மூன்று முறை நந்தி விருதினை வென்றுள்ளார். பத்ரி, இதலு சிராவணி சுப்பிரமணியம் , இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, போக்கிரி, தேசமுடுரு, பிஸ்னஸ் மேன், கேமராமேன் கங்கதோ ராம்பாபு, இதரம்மாயில்தோ ஆகிய புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.