Wednesday, April 30
Shadow

‘துருவங்கள் 16’ படக்குழுவினருக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘துருவங்கள் 16’. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது.

விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தற்போது இப்படத்துக்கு முன்னணி இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். ” துருவங்கள் 16- ஸ்க்ரிப்ட் மீது அபார நம்பிக்கை கொண்டு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ரகுமான் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ஷங்கரின் இந்தப் பாராட்டால், ‘துருவங்கள் 16’ படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

Leave a Reply