
ரஜினி-அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.o. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் முகாமிட்டு சில அதிரடியான காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷங்கர்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சாலிகிராமத்தில் முக்கிய படபிடிப்பு தளத்தில் படபிடிப்பு நடந்து வருகிறது இந்த இடம் அதிகம் வீடுகள் மற்றும் போக்குவரத்துநெரிசலான இடம் இங்கு கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் .
ரஜினி கலந்து கொள்ளாத அந்த படப்பிடிப்பில் சில வில்லன் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு காஸ்ட்டிலியான காருக்குள் வெடிகுண்டு வெடித்து அந்த கார் வெடித்து சிதறுவதைப் போன்று படமாக்கியுள்ளார் ஷங்கர்.
அந்த காட்சியில் நிஜமாலுமே ஒரு காஸ்ட்லியான காரைதான் அவர் பயன்படுத்தினாராம். அந்த காருக்குள் வெடிகுண்டு வெடிப்பது போன்று படமாக்கியதால் அந்த ஏரியாவே வெகுநேரமாக புகை மூட்டமாக காட்சியளித்திருக்கிறது.