இந்திய சினிமாவுக்கு புதிய வணிகப் புரட்சி…! படைப்பாளிகளையும் முதலீட்டாளர்களையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘Discovery Film Market’ அறிமுகம்
ஒரு நல்ல கதை… திறமையான இயக்குநர்… தரமான திரைப்படம்… இவை இருந்தாலும், சரியான தயாரிப்பாளர், முதலீட்டாளர் அல்லது விநியோகஸ்தரைச் சந்திக்க முடியாமல் பல கனவுகள் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. இந்திய திரைப்படத் துறையில் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த இடைவெளியை நிரப்பும் நோக்கில், புதிய தொழில்முறை முயற்சியாக Producer Bazaar தனது Discovery Film Market (DFM)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய B2B திரைப்பட சந்தை, ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16-வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF) மேடையில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் உருவாகும் தருணத்திலிருந்து அது வணிக ரீதியாக வெற்றி பெறும் வரை தேவையான அனைத்து தொழில்துறை இணைப்புகளையும் ஒரே இடத்தில் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த சந்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.
படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான பாலம்
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால் அவற்றை உலக சந்தைக்கும், சரியான முதலீட்டாளர்களுக்கும், OTT தளங்களுக்கும் கொண்டு செல்லும் தொழில்முறை Film Market-கள் மிகவும் குறைவாக உள்ளன. இந்த குறையை தீர்க்கும் வகையில் Discovery Film Market செயல்படுகிறது.
திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், முதலீட்டாளர்கள், OTT நிறுவனங்கள், ஸ்டுடியோக்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் Content Buyers ஆகியோர் நேரடியாக சந்தித்து புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்கும் வாய்ப்பை இந்த தளம் வழங்குகிறது.
“Content Economy-யை வலுப்படுத்துவதே இலக்கு”
Producer Bazaar நிறுவனத்தின் Founder & CEO ஜி.கே. திருநாவுக்கரசு கூறுகையில்,
“இந்தியாவில் உலகத் தரமான கதைகளுக்கும் திறமைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் அவற்றை சரியான முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுடன் இணைக்கும் தொழில்முறை சந்தைகள் மிகக் குறைவு. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே Discovery Film Market உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் செயல்படும் இந்தியாவின் Content Marketplace ஆக வளர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.
ஒரே மேடையில் முழுமையான திரைப்பட வணிக அனுபவம்
Discovery Film Market மூன்று முக்கிய பிரிவுகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
Pitch to Deal: திரைப்படத் திட்டங்களை தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டுடியோக்களிடம் நேரடியாக விளக்கி முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்பு.
Buyer–Seller Market: திரைப்பட உரிமைகள், விநியோகம், Content Licensing மற்றும் Copyright தொடர்பான தொழில்முறை சந்திப்புகள்.
Script Room: அனுபவமிக்க நிபுணர்களின் திரைக்கதை மதிப்பீடு, ஆலோசனை மற்றும் மேம்பாட்டு வழிகாட்டுதல்.
இந்த மூன்று பிரிவுகளும், ஒரு திரைப்படத்தின் ஆரம்பக் கருத்திலிருந்து அதன் வணிக வெற்றி வரை தேவையான முழுமையான தொழில்முறை ஆதரவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து பிரிவினருக்கும் திறந்த தேசிய B2B தளம்
திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், OTT தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், ஸ்டுடியோக்கள், அனிமேஷன் மற்றும் VFX நிறுவனங்கள், கேமிங் நிறுவனங்கள், இசை உரிமையாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு துறையின் அனைத்து பிரிவினரும் இதில் பங்கேற்க முடியும்.
கருத்து நிலையில் இருக்கும் கதைகள் முதல் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு திட்டத்திற்கும் சரியான வணிக கூட்டாளர்களை கண்டுபிடிக்கும் வாய்ப்பை இந்த சந்தை உருவாக்குகிறது.
டிஜிட்டல் பதிவு – நேரடி தொழில்துறை சந்திப்புகள்
Producer Bazaar தளத்தில் பதிவு செய்யும் பங்கேற்பாளர்கள் தங்களது Story Synopsis, Trailer, Pitch Deck மற்றும் உரிமை விவரங்களை பதிவேற்றி, திட்டமிடப்பட்ட B2B சந்திப்புகள் மூலம் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் Content Buyers உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.
இதன் மூலம் கூட்டுத் தயாரிப்பு, முதலீடு, Content Licensing மற்றும் உலகளாவிய விநியோக வாய்ப்புகள் போன்ற பல்வேறு வணிக வாய்ப்புகள் உருவாகும்.
இந்திய திரைப்பட வணிகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புதிய தொடக்கம்
Fipchain Technology Pvt. Ltd. நிறுவனத்தின் முன்னணி தளமான Producer Bazaar, தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய திரைப்படத் துறையை மேலும் ஒழுங்குபடுத்தவும், வெளிப்படைத்தன்மையுடன் வணிக ரீதியாக வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பெங்களூரு சர்வதேச குறும்பட விழாவில் Discovery Film Market-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய உள்ளடக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் வலுவான B2B Content Marketplace உருவாகும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, Producer Bazaar, ICMEG Media & Entertainment IP Summit 2026-இலும் இணைந்து, நவம்பர் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் முக்கிய தொழில்துறை மாநாட்டில் பங்கேற்று, இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றவுள்ளது.
Discovery Film Market Marks a New Chapter for Indian Cinema, Connecting Creators and Investors on a National B2B Platform
A compelling story, a talented filmmaker, and a promising film often struggle to reach the right producer, investor, or distributor. Bridging this long-standing gap in the Indian film industry, Producer Bazaar has launched the Discovery Film Market (DFM), a first-of-its-kind professional B2B marketplace designed to transform the way film content is discovered, financed, and commercialized.
The initiative makes its debut as a key industry platform at the 16th Bengaluru International Short Film Festival (BISFF), India’s only Oscar-qualifying short film festival. The Discovery Film Market aims to connect creators, producers, investors, OTT platforms, distributors, broadcasters, and content buyers under one roof, creating meaningful business opportunities across the entertainment ecosystem.
A Bridge Between Creativity and Commerce
India produces nearly 2,500 films every year, yet opportunities for structured film markets remain limited. While the country is home to exceptional storytelling talent, many creators face significant challenges in finding the right investors, buyers, licensing partners, and distribution channels.
Discovery Film Market has been conceived to address this gap by offering a dedicated B2B platform where filmmakers, writers, producers, studios, OTT platforms, financiers, and content buyers can connect directly, fostering collaborations that help quality content reach the marketplace.
“Strengthening India’s Content Economy”
Speaking about the initiative, G.K. Thirunavukarasu, Founder and CEO of Producer Bazaar, said:
“India has no shortage of world-class stories and creative talent. However, access to the right investors, buyers, licensing partners, and distributors continues to be a challenge for many creators. Discovery Film Market has been created to bridge that gap by building a professional B2B ecosystem where creators, producers, OTT platforms, investors, and content buyers can connect directly. Our vision is to grow Discovery Film Market into a year-round content marketplace that strengthens India’s content economy and enables commercially successful collaborations.”
A Complete Business Marketplace for the Film Industry
The Discovery Film Market is structured around three major segments:
Pitch to Deal – A dedicated platform where filmmakers can pitch projects directly to producers, studios, and investors.
Buyer–Seller Market – Professional meetings focused on content licensing, distribution rights, intellectual property, and commercial partnerships.
Script Room – Expert-led script evaluations, mentoring, and industry guidance to help creators refine their projects before taking them to market.
Together, these segments create opportunities for project financing, co-productions, distribution agreements, content licensing, and the development of commercially viable intellectual properties (IPs).
Open to the Entire Media and Entertainment Industry
The Discovery Film Market welcomes filmmakers, production houses, OTT platforms, television networks, broadcasters, distributors, investors, studios, talent agencies, animation and VFX companies, gaming and interactive content studios, scriptwriters, music rights holders, and intellectual property owners.
From projects at the concept stage to films ready for release, the platform enables participants to connect directly with the right business partners and decision-makers.
Digital Registration and Curated Business Meetings
Participants can register through the Producer Bazaar platform and upload project materials including story synopses, trailers, pitch decks, and rights information. The platform facilitates curated B2B meetings with producers, investors, and content buyers, opening doors to co-production opportunities, investment discussions, content licensing, and strategic partnerships.
Driving the Future of India’s Film Business
Developed by Fipchain Technology Pvt. Ltd., Producer Bazaar is committed to bringing greater transparency, efficiency, and technology-driven innovation to India’s film and entertainment industry.
With the launch of the Discovery Film Market at the Bengaluru International Short Film Festival, Producer Bazaar begins a new chapter in building a robust B2B content marketplace that connects Indian creative talent with national and global business opportunities.
Continuing this momentum, Producer Bazaar will also participate in the ICMEG Media & Entertainment IP Summit 2026, scheduled to be held in Hyderabad on November 27–28, 2026, further strengthening collaboration and innovation across the media and entertainment sector.
