Sunday, October 6
Shadow

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஸ்மோரா

காஸ்மோரா படத்தில், மொட்டை தலை, ஈட்டி, கழுகுச் சின்னம், கவச உடை என, கார்த்தியின் தோற்றம், அனைவரையும் மிரள வைத்துள்ளது. போர் வீரன் தோற்றத்தில் இருப்பதால், பாகுபலி படத்தின் சாயல் இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுகிறது. அதிலும், பாகுபலியில் சத்யராஜ் நடித்த, கட்டப்பா வேடத்தைப் போலவே, கார்த்தியின் தோற்றமும் இருப்பதால், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து பரபரப்பாக அலசப்படுகிறது.

related-section-image-kashmora-4

நவீன கேமரா, ‘3டி பேஸ் ஸ்கேனிங்’ போன்ற தொழில்நுட்பங்களும் இதில் கையாளப்பட்டுள்ளனவாம். இந்த படத்தில், கார்த்தி, மூன்று வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், படத்தின் ஸ்டில்கள் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுவது, படக்குழுவினருக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யதிட்டம் போட்டு உள்ளதாக தகவல் வருகிறது படத்தின் வியாபாரம் பயங்கர சூடு பிடித்துள்ளதாம் கோவை ஏரியாவை காஸ்மோ சிவகுமார் அதிகவிலைக்கு வாங்கியதாக தகவல்

Leave a Reply