
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ – சிரிப்பு, உணர்வு, கற்பனை கலந்த அழகான பயணம்! தயாரிப்பாளர் s.s.கார்த்திக்
சூர்யா வருகையால் களைகட்டிய விழா – பகத் பாசில் நெகிழ்ச்சிப் பேச்சு**
சென்னை:
புதிய கதைக்களம், கற்பனை, சாகசம், உணர்வுகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. படக்குழுவினருடன் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த நிலையில், நடிகர் சூர்யாவின் வருகையும், நடிகர் பகத் பாசிலின் நெகிழ்ச்சியான பேச்சும் விழாவின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
படம் குறித்துப் பேசிய நடிகர் பகத் பாசில், ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ தன்னுடைய திரைப்பயணத்தில் இதுவரை சந்திக்காத வித்தியாசமான அனுபவத்தைத் தந்த திரைப்படம் என்று குறிப்பிட்டார்.
இப்படத்தின் கதையை முதன்முதலில் கேட்டபோதே அது தனக்கு மிகவும் புதிதாகத் தோன்றியதாகவும், இதுவரை தான் ஏற்றிராத கதாபாத்திரமாக இருந்ததால் உடனடியாக நடிக்க விரும்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
படத்தின் படப்பிடிப்பு சுமார் 100 முதல் 120 நாட்கள் நடைபெற்றதாகக் கூறிய பகத் பாசில், இயக்குநர் ஷஷாங்க் தனக்காக அதிக நேரம் ஒதுக்கி, வசனங்கள் மற்றும் திரைக்கதையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
“ஒரு மாதம் முழுவதும் என்னுடன் அமர்ந்து ஒவ்வொரு வசனத்தையும் புரிய வைத்தார். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி,” என பகத் பாசில் தெரிவித்தார்.
படத்தின் காட்சியமைப்பு மற்றும் பிரமாண்டமான உலகை உருவாக்கியதில் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்புக் குழுவினரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். பிராட், சந்தில், மோகன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்திற்கு வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.
இசையமைப்பாளரின் பின்னணி இசை முழுமையான திரைப்படத்தில் ரசிகர்களுக்கு மேலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்றும் பகத் பாசில் தெரிவித்தார்.
“கார்த்தி என்னை ஒரு தம்பியைப் போல பார்த்துக் கொண்டார்”
படத்தின் தயாரிப்பாளர் கார்த்தியைப் பற்றிப் பேசிய பகத் பாசில், அவருடனான உறவை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தனக்கு இரண்டு கதைகளை கார்த்தி கூறியதாகவும், இரண்டுமே பிடித்திருந்ததால் இரண்டு படங்களிலும் நடிக்கத் தயாராக இருப்பதாகத் தான் தெரிவித்தபோது, இரண்டு படங்களையும் தயாரிக்கத் தயாராக இருப்பதாக கார்த்தி கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், ஒரே நேரத்தில் மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் கவனித்துக் கொண்டிருந்த நிலையிலும், ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் வரை தன்னுடன் கார்த்தி இருந்ததாகவும் பகத் பாசில் குறிப்பிட்டார்.
“என்னுடைய குறும்புகள், கோபம், பிடிவாதம் என அனைத்தையும் பொறுத்துக்கொண்டு, ஒரு தம்பியைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு நாளும் நான் முக்கியமானவன் என்ற உணர்வை அவர் எனக்குக் கொடுத்தார்,” என்று பகத் பாசில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சூர்யாவுக்கு மனமார்ந்த நன்றி
நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டது குறித்தும் பகத் பாசில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சூர்யா இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று கார்த்தி கூறியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், ஒரு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக நிகழ்ச்சிக்கு வந்து படக்குழுவினரை உற்சாகப்படுத்தியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி என்றும் பகத் பாசில் தெரிவித்தார்.
மேலும், தன்னை இந்தப் படத்தில் நடிக்க ஊக்கப்படுத்திய ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்த அவர், தனக்காக எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் ஆதரவுக்கும் நன்றி கூறினார்.
“அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்”
விழாவில் பேசிய சூர்யாவும் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஒரு அழகான சினிமா உலகத்தை உருவாக்குவது சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் பலரது அர்ப்பணிப்பும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் படக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருப்பதாகக் கூறிய சூர்யா, சிரிப்பு, அன்பு, உணர்வு, ஆச்சரியம் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய படமாக இது உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், புதிய தலைமுறையினருடன் இணைந்து புதிய கதைகளையும் புதிய உள்ளடக்கங்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராஜமௌலியின் முயற்சிகளையும் சூர்யா பாராட்டினார். இளம் படைப்பாளிகளுக்கு அவர் வழங்கி வரும் ஆதரவு முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் சூர்யா தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
சாராவின் க்யூட் பேச்சு
விழாவில் குழந்தை நட்சத்திரம் சாராவின் பேச்சும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாரா, தனது கதாபாத்திரம் குறித்தும் படத்தின் கற்பனை உலகம் குறித்தும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.
திவ்யா ஒரு பூட்டுத் திறப்பவராகவும், சூரி என்ற கதாபாத்திரத்துடன் இணைந்து பார்வையாளர்களை மாயாஜாலம் நிறைந்த கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேடையில் சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததாக சாரா உற்சாகமாகப் பேசியது நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே ரசனையை ஏற்படுத்தியது.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ‘டபுள் பேட்மிண்டன்’
இதனிடையே, ‘டபுள் பேட்மிண்டன்’ திரைப்படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் கார்த்திக், தனது திரைப்பயணத்தில் இப்படம் முக்கியமான படமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஒடிசாவில் தயாரிக்கப்படும் தனது முதல் திரைப்படம் இதுவென்றும், பலரின் ஆதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரம்மாண்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல், கதையின் உணர்வுகளுக்கும் கதாபாத்திரங்களின் பயணத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக இரண்டாம் பாதை ரசிகர்களுக்கு எதிர்பாராத அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஷஷாங்க், எடிட்டர் வைத்யா, தொழில்நுட்பக் கலைஞர் ரவி நடராஜன் உள்ளிட்ட படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் தயாரிப்பாளர் கார்த்திக் பாராட்டினார்.
கதாநாயகன் சக்கி தனது கதாபாத்திரத்தின் தனித்துவத்தையும் படத்தின் மைய உணர்வையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வசனங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கிய அசோக், பாடல் வரிகளை எழுதிய விஜய் உள்ளிட்டோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், திரு. பரத்வாஜை நீண்ட காலமாக ரசித்து வந்ததாகக் கூறிய கார்த்திக், அவரை கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகத் தெரிவித்தார்.
மொத்தத்தில், ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபுள்’ திரைப்படம் சிரிப்பு, அன்பு, உணர்வு, கற்பனை, ஆச்சரியம் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 2ஆம் தேதி திரையிடப்பட உள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

‘Don’t Trouble the Trouble’ – A Beautiful Journey Blending Laughter, Emotion and Fantasy: Producer S.S. Karthik
Suriya’s Presence Adds Grandeur to the Event; Fahadh Faasil Delivers an Emotional Speech
Chennai:
The pre-release event of Don’t Trouble the Trouble, a film that blends a fresh storyline, fantasy, adventure and emotions to appeal to audiences across age groups, was held in Chennai with great enthusiasm. Several members of the film industry joined the cast and crew to extend their wishes, while actor Suriya’s presence and Fahadh Faasil’s heartfelt speech emerged as major highlights of the event.
Speaking about the film, actor Fahadh Faasil said that Don’t Trouble the Trouble had given him a completely different experience from anything he had encountered in his cinematic journey so far.
He revealed that the story felt extremely fresh when he first heard it and that he immediately wanted to be part of the film because the character was unlike any role he had played before.
Fahadh said that the film was shot for approximately 100 to 120 days and fondly recalled how director Shashank spent considerable time with him, helping him understand the dialogues and screenplay in detail.
“He sat with me for an entire month and helped me understand every dialogue. I sincerely thank him for that,” Fahadh Faasil said.
He also appreciated the contributions of the cinematography and production design teams in creating the film’s visual world and scale. He specifically acknowledged the contributions of technicians including Brad, Sandhil and Mohan.
Fahadh further said that the composer’s background score would enhance the audience’s experience when watching the complete film.
“Karthik Treated Me Like a Younger Brother”
Speaking emotionally about producer Karthik, Fahadh Faasil shared the special bond they developed during the making of the film.
He revealed that Karthik had narrated two stories to him and that he was willing to act in both as he liked both scripts. Karthik, in turn, had expressed his willingness to produce both films.
Fahadh also recalled that although Karthik was simultaneously involved in the shoot of another film, he remained with him on the sets of Don’t Trouble the Trouble for as long as Fahadh was there.
“He tolerated all my mischief, anger and stubbornness and treated me like a younger brother. Every day, he made me feel that I was important,” Fahadh said emotionally.
Heartfelt Thanks to Suriya
Fahadh Faasil also expressed his happiness over actor Suriya attending the event.
He said that he was delighted when Karthik informed him that Suriya would be attending the function and thanked Suriya for immediately making time to come and encourage the team after being informed about the event.
Fahadh also expressed his gratitude to filmmaker S.S. Rajamouli for encouraging him to take up the film and thanked him for the efforts and support extended towards him.
“A Film Everyone Can Watch with Their Families”
Speaking at the event, Suriya congratulated the entire team of Don’t Trouble the Trouble.
He said that creating a beautiful cinematic world was not an easy task and that it required tremendous hard work and the dedication of numerous people behind the scenes.
Suriya praised the team for their commitment and said that the film brings together laughter, love, emotion and moments of surprise.
He also appreciated filmmaker S.S. Rajamouli for continuously encouraging new stories and fresh content by collaborating with the younger generation. Suriya noted that Rajamouli’s support for young filmmakers and creators was significant.
Suriya concluded by wishing that audiences would watch and enjoy Don’t Trouble the Trouble with their families.
Sara’s Cute Speech
Child artiste Sara’s speech at the event also grabbed everyone’s attention. Sara, who plays the character Divya in the film, spoke interestingly about her role and the film’s fantasy world.
She revealed that Divya is a lock-picker who joins the character Soori and takes audiences into a magical world filled with fantasy and adventure.
Sara’s excitement about meeting Suriya on stage also brought smiles to everyone at the event.
‘Double Badminton’ Gives Importance to Emotions
Meanwhile, speaking about Double Badminton, producer Karthik said that the film holds a special place in his cinematic journey.
He revealed that this is his first film to be produced in Odisha and said that the project had been made with the support and blessings of many people.
Rather than focusing solely on grandeur, the film gives importance to emotions and the journey of its characters, he said. He expressed confidence that the second half, in particular, would offer an unexpected experience for audiences.
Producer Karthik also appreciated the dedication of composer Shashank, editor Vaidhya, technician Ravi Natarajan and the rest of the team.
He said that lead actor Chakki had effectively brought out the uniqueness of his character and the central emotion of the story. He also thanked Ashok, who worked on the dialogues and villain character, as well as lyricist Vijay.
Karthik further revealed that he had been a long-time admirer of Mr. Bharathwaj and said that getting the opportunity to produce a film with him as the lead actor was both a matter of happiness and pride.
Overall, the team has described Don’t Trouble the Trouble as a family entertainer that brings together laughter, love, emotion, fantasy and surprise.
The film is scheduled to hit the screens on October 2, and audiences are eagerly looking forward to its release.
