Saturday, February 15
Shadow

‘டோரா’ – திரைவிமர்சனம் (சிறப்பு )Rank 3.5/ 5

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக முக்கிய நடிகை திறமையான அழகான நடிகை என்றும் சொல்லலாம் இதுவரை கவர்ச்சியை நம்பினது போதும் இனி கதை தான் என்று தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு நிச்சயம் ஒரு சபாஷ் போடணும் நல்ல கதை நடிபதர்க்கு எற்ப கதை என்று தான் சொல்லணும் . நயன்தாராவின் நடிப்பின் முதல் முயற்சி மிக பெரியவெற்றி சும்மா ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

இயக்குனரை நிச்சயம் பாராட்டனும் நயன்தாராவை வச்சு தேவை இல்லாமல் பில்டப் எல்லாம் கொடுக்காமல் மிக எளிமையாக சிறப்பாக அமைதியாக நடிக்கவைத்துள்ளார் நயன்தாராவை பறந்த பறந்த அடிக்காமல் லேடி சூப்பர்ஸ்டார் என்று கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் எதார்த்தமாக செய்துள்ளார் படத்துக்கு காமெடி செம்பழம் ஹாரர் படம் என்றால் என்ன இருக்குமோ அதை சிறப்பாக செய்துள்ளார் சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆகுது அதை ஆனால் தெரியவில்லை என்று தான் சொல்லணும்.

ேமிசந்த் ஜெபக் வழங்க, ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பில் நயன்தாரா, தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன் நடிப்பில் தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் டோரா.

பொண்டாட்டி ஓடிப் போன நிலையில் தன் ஒரே மகள் பவழக் கொடிக்காக (நயன்தாரா) கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழும் வைரக்கண்ணு (தம்பி ராமையா ),

வேறு சகோதரத் துணை இல்லாத காரணத்தால் பெண் பிள்ளையை ஆண் பிள்ளை போல வளர்க்கிறார் .

நம்மை விட்டால்அப்பாவுக்கு ஆண் துணை இல்லை என்பதால் வீட்டோடு மாப்பிள்ளை தேடுகிறார் பவழக் கொடி.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது தந்தை தம்பி ராமையா விரும்புகிறார். இதற்காக, குலதெய்வம் கோயிலுக்கு நயன்தாராவை அழைத்துச் சென்று வழிபட முடிவு செய்து, கால் டாக்சி நிறுவனம் நடத்தி வரும் பணக்கார தங்கையிடம் சென்று டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறார். பணக்கார திமிருடன் நடந்துகொள்ளும் தங்கை, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அவமானத்தில் திரும்பும் நயன்தாராவும், தம்பி ராமையாவும் சொந்தமாக கால்டாக்சி நிறுவனம் தொடங்க முடிவெடுக்கிறார்கள். செகண்ட் ஹேண்டில் கார் பார்க்க செல்லும் அவர்களது கண்ணில் ஒரு பழங்காலத்து கார் ஒன்று தென்படவே, நயன்தாரா அதை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்து சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்.

அந்த காரை வைத்துக்கொண்டு சிறியதாக கால் டாக்சி நிறுவனம் தொடங்குகிறார் நயன்தாரா. அவளது கால் டாக்சி நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவியாவிட்டாலும், அவ்வப்போது ஆர்டர்கள் வருகிறது. அப்படி ஒருநாள், கொடைக்கானலுக்கு செல்ல வாடிக்கையாளர் ஒருவர் இவர்கள் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது, நயன்தாரா தனது காருக்கு ஒரு டிரைவரை போட்டு கொடைக்கானலுக்கு அனுப்பி வைக்கிறார்.

கொடைக்கானலுக்கு செல்லும்போது, அங்கு வழியில் செல்லும் ஒரு நபரை பார்த்தவுடன், அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தானாகவே சென்று அந்த நபரை துரத்துகிறது. ஆனால், அந்த நபரை பிடிக்கமுடியாமல் போனவுடன் அங்கேயே நின்றுவிடுகிறது. காரில் பயணம் செய்த அனைவரும் பதட்டத்தில், காரில் இருந்து இறங்கி ஓடிவிடுகிறார்கள்.

இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.

இது நயன்தாராவுக்கு தெரியவே, தனது காரை மீட்பதற்காக கொடைக்கானல் போகிறார். கொடைக்கானலில் இருந்து தனது காரை ஊருக்கு எடுத்து வரும்போது, அதே நபர் மறுபடியும் குறுக்கிட, கார் நயன்தாராவின் கட்டுப்பாட்டை இழந்து அந்த நபரை துரத்தி கொல்கிறது.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஒருநிமிடம் திகைத்து நிற்கும் நயன்தாரா, இதற்காக ஒரு சாமியாரை சந்திக்கிறார். அவர் காரில் ஒரு நாயின் ஆவி இருப்பதாகவும், அந்த ஆவி சிலபேரை கொல்ல துடிப்பதாகவும் கூறுகிறார். மேலும் அந்த நாய்க்கு தேவையான ஒன்று நயன்தாராவிடம் இருப்பதாகவும் கூறுகிறார்.

நயன்தாரா தம்பிராமையா இருவரின் காமெடி படத்துக்கு மேலும் சிறப்பு சும்மா கலகல வென சிரிக்கவைகிரார்கள் நயந்தாரவுகுள் இந்த அளவுக்கு காமெடி சென்ஸ் இருந்து இருக்கு இதை மிகவும் அழகாக வெளிபடுத்தியுள்ளார். இயக்குனர் துரை ராமசாமி அதே போல் சண்டைகட்சிகளில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார் , நயன்தாரா கிளைமாக்ஸ் காட்சியில் நடந்து வருவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை ஞாபகபடுத்துகிறது.

ஹாரிஸ் உத்தமன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எப்போதும் போல அருமையாக நடித்துள்ளார் இதிலும் வில்லன் ஆனால் அமைதியான வில்லன் நயன்தாரா ஹர்ரிஸ் உத்தமன் போலிஸ் ஸ்டேஷன் காட்சி அருமை அதில் நயன்தாரா சில இடங்களில் அந்நியனை ஞாபக படுத்துகிறார் .

படத்த்துக்கு பின்னணி இசை மேலும் பலத்தை கூட்டுகிறது அதே போல மிக சிறப்பான ஒளிப்பதிவு

டோரா மொத்தத்தில் எல்லோருக்கும் புஜ்ஜிமா Rank 3.5/ 5

Leave a Reply