
அங்க கருப்பா ஒரு உருவம் பார்த்தேன், இங்கே வெள்ளையா எதோ பறந்து போச்சு என்று நூற்றாண்டு கால சினிமாவையே ஒரு நிமிஷம் நம்மை திருப்பி பார்க்க வைத்துவிட்டார் இயக்குநர்.
பேய் இருக்குற விஷயத்தை நாங்க இப்படியும் காட்டுவோம் என ஒரு ஸ்பீக்கர், ஒரு மீட்டர், ஒரு டார்ச் என இந்த மூன்றை வைத்து நமக்கு இரண்டு மணி நேரம் வித்தை காட்டியிருக்கிறார்கள்.
சென்னையில் நம் டிவியில் பணிபுரிகிறார் நாயகன் அர்வீ மற்றும் நாயகி அலிஷா சோப்ரா. பேய்களை கண்டுபிடித்து அவைகளிடம் பேட்டி எடுக்கிறார். இந்த நிகழ்ச்சியால் நம் டிவியின் TRP ரேட்டிங் டாப் லெவலுக்கு செல்கிறது. இதனால் இனிமேல் பேய்களை மையப்படுத்தியே நம் ஷோக்களை நடத்துவோம் என முடிவு எடுக்கிறார்கள்.
பேய் இருப்பதாக சொல்லி ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது. அந்த கிராமத்தில் தொடர்ந்த் சிலர் மர்மமான முறையில் இறந்துவிட உண்மையாகவே அந்த கிராமத்தில் இருப்பவர்களை பேய் கொலை செய்யவில்லை என்பது அர்வீக்கு தெரியவருகிறது.
கிராமத்தில் ஆவிகள் இருக்கிறதா என ஆராய்ந்து பார்த்துவிட்டு இந்த ஊரில் பேய் இல்லையென கூறுகிறார் நாயகன் அர்வீ. பேய் இல்லைன்னா அப்போ யார் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் கொலை செய்வது யார் என்கிற பரபரப்பான திரைக்கதையை நோக்கி நகர்கிறது படம்.
அந்த கிராமத்தில் நாயகன் ஒரு பெண்ணை சந்திக்கிறார். அதன் பிறகுதான் படத்தின் மீட்டர் ஆட்டோ மீட்டரைவிட டாப் கியரில் எகிறுகிறது. யார் அந்த பெண்? ஊர் மக்களை கொல்வது யார்? என பல முடிச்சுகளோடு க்ளைமேஸ்.
நாயகன் அர்வீ புதுமுகம் என்பதால் நடிப்பில் குறை கூற முடியாது, முதல் படம்தானே அப்படித்தான் இருக்கும், அப்போ அடுத்த படத்துல தேறிடுவாரான்னு கேட்குறவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…
நாயகிகள் அலிஷா, மற்றும் ஷீலா இருவருக்கும் படத்தின் கதையை இரண்டாம் பாதியில் சுமந்து செல்வது அருமை…
இசை ரவி விஜய் ஆனந்த் பாடல்கள் இத்தனை வருஷமா எங்கய்யா இருந்த மெலோடிகளில் மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார். அதுமட்டுமா பின்னணியிலும் குறை கூற முடியவில்லை… வாழ்த்துகள் ரவி விஜய் ஆனந்த். பிரேம்ஜி ஒரு பாடல், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல், வெங்கட் பிரபு என இளையராஜாவின் வாரிசுகளை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார்.
இயக்கம் ஃபிரான்சிஸ் 14 வருட தவத்தை முதல் படத்தில் களைத்திருக்கிறார். செய்றத உருப்படியாக செய்யனும்னு முழு ஈடுபாட்டோட படத்தை எடுத்தது நன்றாகவே தெரிகிறது. அடுத்தடுத்த படங்களில் சிறந்த வெற்றியை பெற வாழ்த்துகள்.
மொத்தத்தில் இந்த என்னமா கத வுடுறானுங்க – நம்புற மாதிரிதான் கத வுடுறானுங்க..