Wednesday, April 30
Shadow

எந்திரன் இதோடு முடியாது மூன்றாம் பாகம் தொடரும் இயக்குனர் ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘2.0’ படம் 2017 தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்‌ஷய்குமாரின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டனர். அடுத்து ரஜினியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் இயக்குநர் ஷங்கரிடம் சில கேள்விகளை எழுப்பினார். அப்போது இயக்குநர் ஷங்கர் “எந்திரன் படம் இதோடு முடிந்துவிடாது, அடுத்த பாகமும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஷங்கர் பேசுகையில், “‘எந்திரன்’ படத்தில் நான் செய்ததையே இன்னும் சிறப்பான முறையில் செய்ய வேண்டிய கட்டாயம். ‘எந்திரன்’ படம் இமயமலை ஏறுவது போன்றது. ஆனால் ‘2.0’ படம், தோளில் இருக்கும் ஒரு இமயமலையைப் போன்று இருந்தது. கண்டிப்பாக இதோடு எந்திரன் படம் முடியாது. 3ஆம் பாகம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

அக்‌ஷய் குமார் பேசும் போது, “என்னுடைய திரையுலக வாழ்வில் நான் மேக்கப் போட்டதில்லை. ‘2.0’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்காக நீண்ட நேரம் அமர்ந்து மேக்கப் போட்டேன். அதனை மறக்க முடியாது. கண்டிப்பாக ‘2.0’ திரைப்படம் இந்தியத் திரையுலகில் சாதனை படைக்கும். ரஜினி சாருக்கு என தனி ஸ்டைல் இருக்கிறது. அனைவரும் அவரிடமிருந்து, எப்படி அவர் உடை, கண்ணாடி உள்ளிட்டவை அணிவதை கற்றுக் கொள்ள வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Leave a Reply