
‘Evil Dead Burn’ திரைப்படம் திகிலின் உச்சத்தைத் தொட தயாராகிறது
சென்னை:
உலகம் முழுவதும் திகில் திரைப்பட ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள ‘Evil Dead’ திரைப்பட வரிசையின் புதிய அத்தியாயமாக ‘Evil Dead Burn’ திரைப்படம் உருவாகி, விரைவில் திரையரங்குகளை அதிரவைக்கத் தயாராகியுள்ளது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் இந்த திரைப்படம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
திகில் திரைப்படங்களுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் சாம் ரெய்மி உருவாக்கிய ‘Evil Dead’ தொடர், 1981-ஆம் ஆண்டு வெளியான முதல் படத்திலிருந்து உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘Evil Dead 2’ (1987), ‘Army of Darkness’ (1992), பின்னர் ‘Evil Dead’ (2013) மற்றும் ‘Evil Dead Rise’ (2023) ஆகிய படங்கள் ரசிகர்களை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தின.
அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த முக்கிய படியாக உருவாகியுள்ள ‘Evil Dead Burn’, தொடரின் ஆறாவது படமாக வெளியாகிறது. அதேசமயம், 2028-ஆம் ஆண்டில் இந்த தொடரின் ஏழாவது பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் கதை, கணவனை இழந்த துயரத்தில் இருக்கும் ஒரு பெண், தனது மாமியார் வீட்டில் தனியாக வாழத் தொடங்கும் முடிவை எடுப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அமைதியைத் தேடி சென்ற அவளது வாழ்க்கை, எதிர்பாராத விதமாக நரக சக்திகளின் கொடூர ஆட்டமாக மாறுகிறது. மனிதர்களுக்கும் தீய ஆவிகளுக்கும் இடையிலான உயிர் பிழைப்புப் போராட்டம், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சொஹைலா யாகூப், டேண்டி ரைட், ஹண்டர் டூஹான், லூசியான் புக்கானன், ஏரல் ஷாண்ட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு பிலிப் லோசானோ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், டபுள் டேஞ்சர் இசையமைத்துள்ளனர்.
திகில், பதற்றம், மர்மம் மற்றும் அதிரடி ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்ட ‘Evil Dead Burn’, ‘Evil Dead’ ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை திகில் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத திரையரங்கு அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘Evil Dead Burn’ Promises a Terrifying New Chapter in the Iconic Horror Franchise
Sony Pictures Entertainment India is set to bring another spine-chilling installment from one of the most celebrated horror franchises with Evil Dead Burn, the sixth film in the globally acclaimed Evil Dead series. The film will be released in English, Hindi, Tamil, and Telugu.
Created by legendary filmmaker Sam Raimi, the Evil Dead franchise has remained a benchmark in supernatural horror since the release of the original The Evil Dead in 1981. The series went on to achieve cult status with Evil Dead II (1987) and Army of Darkness (1992), before being successfully revived with Evil Dead (2013). The franchise continued its impressive run with Evil Dead Rise (2023), paving the way for the latest standalone sequel, Evil Dead Burn.
Directed by Sébastien Vaniček, Evil Dead Burn takes the franchise into an even darker and more terrifying territory. The story follows a grieving widow who decides to live alone in her late husband’s family home, hoping to rebuild her life in peace. However, her search for solitude soon turns into a horrifying nightmare as sinister supernatural forces emerge, transforming what should have been a family home into a gateway to unimaginable evil.
Blending psychological horror, relentless suspense, and intense supernatural action, the film promises one of the most frightening experiences in the franchise’s history.
The cast features Souheila Yacoub, Dandy Wright, Hunter Doohan, Luciane Buchanan, Earl Shaunt, and several other talented actors.
The film is directed by Sébastien Vaniček, with Philippe Lozano serving as the cinematographer and Double Danger composing the musical score.
As anticipation continues to grow among horror fans worldwide, Evil Dead Burn is expected to deliver another terrifying cinematic experience while expanding the legacy of one of horror cinema’s most enduring franchises. The franchise is also set to continue with its seventh installment, currently slated for release in 2028.
