Friday, October 11
Shadow

“தல 57” பிரபல ஹிந்தி ஹீரோவை வில்லனாக நடிக்க வைக்க அஜித் திட்டம்

தல 57 2வது கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் மிகுந்த பொருட்செலவில் இன்டர்நேஷனல் தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் திடமாக உள்ளார் இயக்குனர் சிவா.

மேலும் இப்படத்தில் ஹீரோவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரம் உள்ளது. இதனால் தகுந்த நடிகரை நீண்ட நாட்களாக தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிமுகம் ஆன ஒரு இந்தி நடிகர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல, அப்படி ஒருவர் கிடைத்தால் இந்தியிலும் படத்தை வெளியிடலாம் என்று நினைத்தாராம் அஜித், இது குறித்து இயக்குனர் சிவாவிடம் யோசனை சொல்லியிருகிறார்.

அதுவும் அபிஷேக் பச்சன் மாதிரி ஹீரோ கிடைத்தால் ஹிந்தியிலும் இப்படத்துக்கு பெரிய மார்க்கெட் கிடைத்து விடும் என்று எண்ணிய சிவா, உடனே அபிஷேக் பச்சனை தொடர்பு கொள்ள அதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளாராம்.

எல்லாம் திட்டமிட்ட படி நடந்தால் உண்மையில் தல 57 இன்டர்நேஷனல் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வேதாளம் ஹிந்தி டப்பிங் மிகவும் பிரபலம் ஆனதால் ஹிந்தியிலும் ரிலீஸ் செய்து தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதிக்கணும் என்ற எண்ணம் எதனை ஹீரோக்கு இப்படி எல்லாம் தூணும் தல தல தான்

Leave a Reply