பர்கானா திரை விமர்சனம்
இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்று சொல்ல வேண்டும் தரமான படங்கள்தான் வந்திருக்கிறது அந்த வகையில் மிகச்சிறந்த படம் என்று சொல்லலாம் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜித்தன் ரமேஷ் கிட்டி செல்வ ராகவன் ஐஸ்வர்யா தத்தாமற்றும் பலர் நடித்த ஃபர்கானா
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஷான் இசையில் வந்திருக்கும் மிகச் சிறந்த படம் என்று சொல்லலாம் ஃபர்தானா
படத்தின் கரு பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தை சார்ந்த மிக எளிமையான பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் வேலைக்கு போக முயற்சிக்கிறார் இதனால் குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் இதயம் மீறி இவர் வேலைக்கு போகிறார் அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளை தான் ஒரு படமாக கொடுத்திருக்கிறார். இயக்குனர் வெங்கடேசன்
சரி படத்தின் கதையை பார்ப்போம் தென்னை திருவல்லிக்கேணி வசிக்கும் மிக எளிமையான பாரம்பரியமிக்க இஸ்லாமிக் குடும்பத்தை சேர்ந்தவர் பர்கானா தன் குடும்பத்தின் ஏழ்மையின் நிலைமையை சரி செய்ய வேலைக்குச் செல்ல தன் கணவர் ஜித்தன் ரமேஷிடம் கூறுகிறார். அவரும் குடும்ப சூழ்நிலை புரிந்துகொண்டு மதக்கட்டுப்பாட்டையும் மீறி தன் அப்பாவிடம் உத்தரவு வாங்கி வேலைக்கு அனுப்புகிறார். இவர் பணி புரியும் இடமும் ஒரு கால் சென்டர் முதலில் இவர் வேலை செய்யும் வேலை கிரெடிட் கார்ட் ஆர்டர் எடுப்பது. தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இதே கால் சென்டரில் வேறு ஒரு வேலை ஆன ஆண்களிடம் அரட்டை அடிப்பது வேலைக்கு செல்கிறார் காரணம் இதில் பணம் அதிகமாக கிடைக்கும் என்பதால் அப்படி அதிகமான ஆண்களுடன் பேசும்போது ஒரு ஆணின் நட்பு ஏற்படுகிறது அவன் பேசும் வார்த்தைகள் இவருக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது இதனால் அவனுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார் இந்த பழக்கம் விபரீதத்தில் முடிகிறது இவனால் ஏற்படும் சிக்கல்களை இருந்து இவள் எப்படி விடுபடுகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஒரு பாரம்பரியமிக்க ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கையை மிகவும் அழகாக பிரதிபலித்து இருக்கிறார் அதிலும் ஒரு எளிமையான முஸ்லிம் முஸ்லிம் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார். திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் வசிக்கும் பலருக்கு இந்த ஏழ்மையான இஸ்லாமிய குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்கள் தெரியும் அதை எப்படி இவ்வளவு கணச்சிதமாக படம் பிடித்தார் என்பது மிக ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் படத்தின் திரைக்கதை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தக் கதைக்கும் இந்த திரைக்கதைக்கும் முக்கியமாக இருவர் உயிர் கொடுத்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றொருவர் ஜித்தன் ரமேஷ் பர்கானா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் வசிக்கும் பெண்ணின் கண்ணாடியாக பிரதிபலிக்கிறார். அதிலும் ஒரு முஸ்லிம் பெண்ணாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அவர் தொழில் செய்யும் போதும் அவ்வளவு நுண்ணியமாக ஒவ்வொன்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு நடித்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம் தமிழ் சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார் பல இடங்களில் தான் ஒரு மிகச்சிறந்த சென்னை நடிகை என்பதை நிரூபித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அது வடசென்னை பெண்ணாக இருக்கட்டும் தென் சென்னை இஸ்லாமிய பெண்ணாக படத்திலும் சரி கன கட்சிதமாக நடித்திருப்பது மிக பாராட்டக் கூடிய ஒன்றிய ஒரு விஷயம்
பாராட்டுக்குரிய வேண்டிய விஷயம்
படத்தின் அடுத்த பலம் என்று சொன்னால் ஜித்தன் ரமேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் கணவனாக நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் நம்மை மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் மிக எளிமையான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் தான் தந்தையின் செருப்பு கடையில் வேலை செய்கிறவர் முகத்தை வைத்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாமல் தன் குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்திருக்க முடியாமல் தவிக்கும் ஜித்தன் ரமேஷ் வேடத்தில் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தனக்கு வருவாய் இல்லை என்பது புரிந்து கொண்டு அதற்காக தன் மனைவியை அவர் இஷ்டத்துக்கு விட்டுக் கொடுக்காமல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் மனைவிக்கு பக்க பலமாக இருக்கும் கணவனாக நடித்திருக்கிறார். தன் மனைவி செய்த தவறை புரிந்துகொண்டு அது தவறு இல்லை என்றும் தெரிந்து கொண்டு அவருக்கு பக்க பலமாக இருக்கும் கணவனாக நடித்திருக்கிறார். ஒரு ஏழ்மை கணவன் எப்படி இருப்பார் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த படத்தில் வலம் வந்திருக்கிறார். தன் மனைவி அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை சொல்லும்போது இதற்கெல்லாம் நான் தானே காரணம் எனக்கு வருவாய் இருந்திருந்தால் உன்னை வேலைக்கு அனுப்பி இருக்க மாட்டேன் நான் ஒரு கையாலாகாதவன் ஆகிவிட்ட காரணத்தினால் தானே உன்னை நான் வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்று அழும் அருங்காட்சியில் நம்மளை உருக வைக்கிறார். இந்த படத்திற்குப் பிறகு தமிழ் சினிமா நிச்சயம் மீண்டும் ஒரு நல்ல வலம் வருவார் என்பது எந்த விதமான சந்தேகமும் இல்லை
செல்வராகவன் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நட்புக் கொண்டு பின்னர் அவரையே மிரட்டும் வில்லனாக நடித்திருக்கிறார் ஆரம்பத்தில் இருந்து தன் முகத்தை காட்டாமலே நடித்திருப்பார் இறுதிக்காட்சியில் வரும் போது தான் அவர் முகம் வெளிப்படும். செல்வராகவன் தன் நடிப்பை படத்திற்கு படம் நிரூபித்து வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இந்த படத்திலும் தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்ல ஒரு சிறந்த சிறந்த நடிகர் என்றும் நிருபித்திருக்கிறார்
மற்றும் இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியில் இளைஞர்களை கவருகிறார். கிட்டி ஏழ்மையான முஸ்லிம் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையாக நடித்திருக்கும் இவர் படத்தின் கதைக்கு பக்கபலமாக உள்ளார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் என்று சொன்னால் அது அனுமோல் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பணிபுரியும் அனுமோல் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்திற்கும் பக்கபலமாக வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு முயற்சிக்கும் தன் பங்கை செலுத்துகிறார் எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு நட்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக தான் இருக்கும் அனுமோல் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது இயக்குனருக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது
படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொன்னால் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கதைக்கேற்ப கச்சிதமனை இசையை கொடுத்திருக்கிறார் குறிப்பாக பின்னணி இசையில் நம்மை மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வரும் படங்கள் அனைத்துமே இதுவரை சோடை போனதில்லை அதேபோல இந்த படமும் ஒரு மிக சிறந்த படம் என்பதை நிரூபித்து இருக்கிறது இதற்காக எஸ் ஆர் பிரபுவை பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மொத்தத்தில் பர்கானா தமிழ் சினிமாவின் அரசி