Tuesday, September 10
Shadow

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24ஆம் ஆண்டுக்கான நம்பிக்கைக்குரிய பல படங்களைக் கையில் வைத்துள்ளார்

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24ஆம் ஆண்டுக்கான நம்பிக்கைக்குரிய பல படங்களைக் கையில் வைத்துள்ளார்

 

நினைவில் நிற்கும் மறக்கமுடியாத கதைகளை உருவாக்குதல் மற்றும் ஈர்க்கும் வகையிலான கதை சொல்லல் ஆகியவை ஒரு சிறந்த இயக்குநருக்கான முக்கிய திறமைகள். அந்த வகையில் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன், பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஓடிடி தளங்களிலும் மக்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளைக் கொடுத்து வருகிறார்.

தனது அறிமுகப் படமான ‘மரகத நாணய’த்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சரவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வீரன்’ திரைப்படமும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு ஓடிடியிலும் பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ஒரு நல்ல படத்தின் முக்கிய அம்சம், தமிழ் தெரியாத பார்வையாளர்களையும் கவருவது. ‘வீரன்’ அதை செய்து வருகிறது.

அடுத்தடுத்த வெற்றிகரமான திரைப்படங்கள் மூலம், இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் 2023-24 காலகட்டத்தில் அவரை பிஸியாக வைத்திருக்கும் படங்களைப் பெற்றுள்ளார்.

இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் கூறும்போது, ​​“இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த அன்புடனும் வெற்றியுடனும் வளர்த்த ஒட்டுமொத்த திரையுலக நண்பர்களுக்கும், பத்திரிக்கை-ஊடக நண்பர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னணி நடிகர்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி உட்பட அதே நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறேன். இது முடிந்தவுடன் விஷ்ணு விஷால் மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து ஒரு ஃபேண்டஸி படம் இயக்குகிறேன்” என்றார்.

ஏ.ஆர்.கே.சரவன் திரைப்படப் பிரியர்களுக்கு கற்பனையுடன் கூடிய அழகிய பொழுதுபோக்குப் படங்களை அவர் தருவதால் உலகளாவிய பார்வையாளர்களையும் அவரால் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையை பல பான் இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளார்.

Filmmaker ARK Saravan has his hands full of promising projects for 2023-24

Creating memorable stories and engrossing storytelling are the key elements of a filmmaker’s value. Filmmaker ARK Saravan has impressed audiences, producers, trade circles, and OTT platforms with his impeccable style of entertaining the crowds.

Following the successful debut of Maragadha Naanayam, the filmmaker claimed success with his recent release ‘Veeran’ starring Hiphop Tamizha Aadhi. The film became a blockbuster with its theatrical run and continues to enthrall OTT audiences as well. A fascinating aspect of the film is its ability to work wonders even in non-Tamil-speaking regions.

With back-to-back successful movies, director ARK Saravan has got his hands full of projects that will keep him busy in the period of 2023-24.

Director ARK Saravan says, “I thank the entire film fraternity, press-media friends, and film lovers for nourishing my directorial journey with so much love and success. I am glad I have more projects lined up now. I will team up with the ‘Maragadha Naanayam’ team for the sequel, which will have the same star cast including lead actors Aadhi and Nikki Galrani. Soon after completion, After the successful hit Veeran I will be collaborating again with Sathya Jyothi Films for fantasy project starring ActorVishnu Vishal.”

With ARK Saravan endowing aesthetically pleasing entertainers with fantasy elements to film lovers, he has now become the center of attraction for many Pan-Indian production houses that believe he has the potential to grab audiences’ attention in all regions.