
‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் வெளியாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யுடன் நடிக்க ஆசையாக இருப்பதாக அதுல்யா ரவி கூறியிருக்கிறார்.
இது பற்றி அதுல்யா அளித்த பேட்டியில், “நான் முதலில் விஜய் ரசிகை. அதன் பிறகு தான் நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைக்கட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி உள்ளனர்.