Saturday, October 12
Shadow

அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் ” கா – வியன்

2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்  ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் “கா-வியன்”. இப்படம் முழுக்க முழுக்க பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு  அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” நடைபெற்று வருகிறது. ஷாம் நாயகனாக நடிக்க , ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மேலும் கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற உள்ளார்கள். N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் சண்டைப்பயிற்சி – STUN சிவா, நடனம் – விஷ்ணு தேவா, கலை – ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு – கணேஷ் குமார் ( Las Vegas) என மிக பிரம்மாண்டமான தொழில்நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS) படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்.

Leave a Reply