வளர்ந்துவரும் இசையமைப்பாளர் எம் சி ரிக்கோ அவர்களின் flora flora என்ற ஆல்பத்தின் first look போஸ்டரை ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் வெளியிட்டார்.இந்த ஆல்பம் ஒரு love வீடியோ சாங் இது ஒரு காதலன் காதலிக்குள் எப்படிஎல்லாம் சண்டை வருகிறது பின்பு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் மையக்கரு. இந்த ஆல்பத்தில் அறிமுகநாயகன ராஜ்குமார் கதாநாயகனாகவும், மௌனிகாதேவி என்ற விளம்பர மாடல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இது கதைபோல் நகரும் ஒரு ஆல்பம் இதை கதையின் குறும்படம் என்று கூட சொல்லலாம்.
எம்.சி.ரிக்கோ மய்யம், இங்கிலிஷ் படம் ஆகிய திரைப்படத்தின் இசையமைப்பாளர். மேலும் இவர் 45 படத்திற்கு மேல் ரேப் பாடல் பாடியுள்ளார், இவர் இசையமைக்கும் திரைப்படங்களுக்கும் ரேப் பாடல்கள் இவரே எழுதி பாடியுள்ளார். உயர்திரு 420, 13 ம் நம்பர் வீடு போன்ற திரைப்படங்களுக்கு இவரே ரேப் பாடல் எழுதி பாடியுள்ளார். சகல மச்சான் சகல மாமா, டிஸ்கோ கேர்ள் போன்ற ஆல்பங்களுக்கு இவரே கதை எழுதி இசையமைத்து இயக்கியுமுள்ளார். இதனைத்தொடர்ந்து பிங்கோ லவ் ஆல்பமும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது, இதற்கும் கதை, இசை, இயக்கம் இவரே இந்த ஆல்பமும் விரைவில் வெளிவர உள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார், இத்திரைப்படத்திற்க்காக ஒரு முக்கிய நடிகரிடம் கதைசொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளார். அதன் அறிவிப்பு பிங்கோ லவ் ஆல்பம் வெளியிட்டீன்போது அறிவிக்கவுள்ளார்.