Saturday, October 12
Shadow

உலக உணவு தினத்தையொட்டி ஃபுட் பேங்க் சென்னை உணவு வழங்கும் நிகழ்ச்சி

உலக உணவு தினத்தையொட்டி ஃபுட் பேங்க் சென்னை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட உணவு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை முழுதும் ஒரு வேளை உணவின்றி தவிக்கும் ஏழை, ஆதரவற்ற, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக சென்று தனனார்வல்ர்கள் உணவு பொட்டலங்களை வழங்கினர். இதுவரை லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை இவ்வாறு வழங்கியுள்ள ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பு ஊட்ட சத்து குறைபாடு மற்றும் உணவு பற்றாக் குறையை இந்தியாவிலிருந்து அகற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் SP லாவண்யா இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். “ உலக உணவு தினமான இன்று இத்தகைய பிரமாண்ட உணவு வழங்கும் நிகழ்வை ஒன்றிணைத்த ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பாளர் சிநேகா மோகன்தாஸ் மற்றும் தன்னார்வலகளை பாராட்டினார். உணவின் மகத்துவம் அதற்காக தவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும், நாம் அனைவரும் உணவை வீண் செய்யாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிநேகா மோகன்தாஸ் “ அடிப்படை உணவும் பெரும் கனவாய் இருக்கும் ஒவ்வொரு எளியவர்க்கும் இன்று இந்த உணவு சென்றடைந்துள்ளது. பொது மக்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கினர் தங்களால் இயன்ற அளவுக்கு பலர் தங்களின் நேரத்தை ஒதுக்கினர். பசி மற்றும் ஊட்ட சத்து குறைபாடில்லாத இந்தியாவே எங்கள் குறிக்கோள். ஃபுட் பேங்க் இந்தியா இதை முன் வைத்தே பல செயல்பாடுகளில் ஈடு பட்டு வருகிறது. தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நம் சமூகத்தில் பெரும் மாற்றங்களை உண்டாக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டை. ஊபர் டாக்சி நிறுவனம் இங்கு தயாரித்த உணவுகளை பல்வேறு இடத்திற்கு சென்று சேர்த்த்தனர். உணவு அருந்தும் ஒவ்வொரு முகத்திலும் ஏற்படும் புன்னகையே எங்கள் வெகுமதி. வயிறுகள் வாழ்த்தட்டும், வையம் தழைக்கட்டும்” எனக் கூறினார்.

Leave a Reply