ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தீபாவளி வெளியீடாக இருந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ தற்போது நவம்பர் மாதத்தில் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தியது. வரும் வாரத்தில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில், பிராசந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி, ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த ‘புரூஸ் லீ’ படக்குழுவும் தங்களுடைய வெளியீட்டை நவம்பரில் உறுதிப்படுத்தி இருக்கிறது.
‘புரூஸ் லீ’யும் வரும் வாரத்தில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்கள். எந்த படத்தை முதலில் வெளியிடுவது என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
இது மாதிரி கடந்தவாரம் விஜய் சேதுபதி இப்படி தொடர்ந்து ஒரே மாதத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்தார் அதை தொடர்ந்து ஜி.வி பிரகாசும் ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் அவருக்கு இரண்டும் வெற்றி இவருக்கும் அப்படி அமையுமா என்று பொருது இருந்து பாப்போம் .