Sunday, October 13
Shadow

‘கடவுள் இருக்கான் குமாரு’ நவம்பர் 10-ம் ரிலீஸ் இதே நவம்பர் மாதம் மேலும் ஒரு படம்

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக இப்படம் தீபாவளியில் வெளியாகும் என கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது இப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையை தொடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ்க்கு ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் விஜய் சேதுபதி வழியில் வருகிறார் இப்படி ஒரு ஹீரோக்கு ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் என்றால் அது அவரது வளர்ச்சியை காமிகிறது என்று தான் சொல்லணும் .

Leave a Reply