Saturday, February 15
Shadow

விஜய்சேதுபதிக்கு போட்டியா வருவார் ஜி.வி.பிரகாஷ் -இயக்குனர் பாண்டிராஜ்

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்திருக்கும் படம் ‘புரூஸ்லி’. இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பி.வி.‌ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர் பாண்டிராஜ் பேசும் போது “என்னுடைய உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறி வருவது சந்தோ‌ஷம். ஒரு இயக்குனருக்கு இதைவிட வேறு பெருமை வேண்டியதில்லை. இந்த படத்தின் இயக்குனர் தனது பெயருக்கு பின்னால் போட்டியிருப்பது அவரது குருவான எனது பெயர் என்று நினைக் கிறார்கள். அது தவறு. அவரது பெயருடன் இருப்பது அவரது தந்தை பெயர்.

ஜி.வி.பிரகாஷ் படத்துக்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறார். நிறைய படங்களில் நடிக்கிறார். இப்போது வேண்டுமானால் விஜய் சேதுபதி அதிக படங்களில் நடித்திருக்கலாம். அவருக்கு சவால் விடும் வகையில் அடுத்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ் இதைவிட அதிகமான படங்களில் நடிப்பார். மாதம் ஒரு படம் வெளியாகும். இவர் கடுமையான உழைப்பாளி. இவருடைய வளர்ச்சி பெருமை அளிப்பதாக இருக்கிறது” என்றார்.

பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரெங்கா’ படத்தின் 2-வது பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply