Friday, June 14
Shadow

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ உருவாகி இருக்கிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘800’ என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த பிரம்மாண்ட படமாக இதைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் விழா செப்டம்பர் 5-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வரலாற்று சாதனை மிக்க பல போட்டிகளை சச்சின் இந்தியாவுக்காகவும், முரளிதரன் தனது நாடான இலங்கைக்காகவும் விளையாடியுள்ளனர். களத்தில் அவர்களுக்கு இடையே போட்டி இருந்த போதிலும், இரண்டு ஜாம்பவான்களும் எப்போதும் களத்திற்கு வெளியே ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொண்டனர். வரும் செவ்வாய்கிழமை டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு டெண்டுல்கர் வருவார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீதேவி மூவீஸின் மூத்த டோலிவுட் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் ‘800’ படத்தின் அனைத்து மொழிகளிலும் விநியோக உரிமையை சமீபத்தில் வாங்கினார். தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியானதும் இதன் புரோமோஷனல் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்படும். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் பேசுகையில், “டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மைதானத்தில் தனது ஆட்டத்தால் கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்வித்தவர். முரளிதரன், மற்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ‘800’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது” என்றார்.

*நடிகர்கள்:*
மதுர் மிட்டல், மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேலா ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோஹிதாஸ்வா மற்றும் பலர்.

*தொழில்நுட்பக் குழுவினர்:*
எடிட்டர்: பிரவீன் கே.எல்.,
ஒளிப்பதிவாளர்: ஆர்.டி.ராஜசேகர்,
இசையமைப்பாளர்: ஜிப்ரான்,
எழுத்து, இயக்கம்: எம்.எஸ்.ஸ்ரீபதி.

*’God Of Cricket’ Sachin Tendulkar to be Chief Guest for Trailer Launch Event of ‘800’

*’800′ has been made as a biopic of legendary Muttiah Muralitharan*

Muttiah Muralitharan, the legendary off-spinner, is the only bowler in the history of International Test cricket to take 800 wickets. An authentic biopic on him has been awaited. Movie Train Motion Pictures is making a grand sports-based film titled ‘800’. Madhur Mittal of ‘Slumdog Millionaire’ fame is essaying the role of Muralidharan in the film. Mahima Nambiar plays Madhimalar Ramamurthy, the former cricketer’s wife, in it. Directed by MS Sripathy, the film is co-written by the Booker Prize (2022) laureate Shehan Karunatilaka.

The film’s trailer event is going to be held in a grand scale at Mumbai on September 5th. Sachin Tendulkar, the God of Cricket, is going to grace the event as the chief guest. Sachin played many iconic matches for India and Muralidharan for his country, Sri Lanka. Despite their on-field rivalry, the two legends have always shared a good rapport off the field. It is sensational that Tendulkar will be there for the special occasion on the coming Tuesday.

Senior Tollywood producer Sivalenka Krishna Prasad of Sridevi Movies recently acquired the distribution rights of ‘800’ for the entire country across languages. Made in Tamil, the film will be released in Telugu, Hindi and English. The promotional activities will be stepped up after the release of the trailer.

The much-awaited film is all set to be released in theatres in the month of October.

Talking about the high-profile trailer launch event, producer Sivalenka Krishna Prasad said, “I am very happy that the iconic Sachin Tendulkar is gracing the trailer launch event. He mesmerized crores of Indians with his game on the field. Muralidharan, other famous cricketers and several movie celebrities will also be present at the event. The post-production of ‘800’ is going on at a fast pace.”

Cast:

Madhur Mittal, Mahima Nambiar, Naren, Nassar, Vela Ramamoorthy, Riythvika, Vadivukkarasi, Arul Das, Hari Krishnan, Sarath Lohithaswa and others.

Crew:

Editor: Praveen KL; Cinematographer: R.D. Rajasekhar; Music Director: Ghibran; Writer-Director: MS Sripathy.