Saturday, March 22
Shadow

அதர்வாக்கு ஜோடியாகும்நயன்தாரா வில்லனாகும் கெளதம் மேனன்

டிமான்ட்டி காலனி’ படத்தஒ தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அதர்வாவுடன் நடிக்கவிருக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா, ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக செல்வகுமார், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதர்வாவுக்கு நாயகியாக வேறு ஒருவரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது படக்குழு. மேலும், இதுவரை நயன்தாரா நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இப்படம் இருக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவித்த்தார்கள்

இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, “கதையாக எழுதும் போது, ஒரு கதாபாத்திரத்துக்கு இவர்கள் எல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேசுவோம். அவ்வாறு கெளதம் மேனன் பெயர் இருந்தது உண்மை தான். ஆனால், இன்னும் நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் கதைக் கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். ஆகையால்,கெளதம் மேனன் வில்லனாக என்று இப்போதைக்கு சொல்ல முடியாது” என்று தெரிவித்தனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் இருக்கிறார். விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு திட்டமிட்டு

Leave a Reply