*’புஷ்பா: தி ரூல்’ படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகிறது!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் அட்டகாசமான டீசருடன் சுகுமார் & குழு தயாராக உள்ளது.
புஷ்பா ராஜின் மேஜிக்கை மீண்டும் திரையில் காணத் தயாராகுங்கள்! ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.
நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.
‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.
*Grand Teaser For ‘Pushpa: The Rule’ to drop on April 8*
*Sukumar & team ready with a scintillating Teaser on Icon Star Allu Arjun’s birthday*
Get ready to witness the return of the Pushpa Raj magic! The highly anticipated sequel, ‘Pushpa: The Rule’, starring the inimitable Allu Arjun in an invincible role, is gearing up for a grand release worldwide on August 15, 2024. This glorious pan-India project, produced by Mythri Movie Makers in association with Sukumar Writings, promises a buoyant cinematic experience of sorts. Directed by the visionary filmmaker Sukumar, ‘Pushpa: The Rule’ is an action-packed extravaganza billed to take the global stage by storm.
The makers are pleased to announce that the film’s extraordinary, riveting and power-paced Teaser is going to be out on April 8. The day is special because it is the Icon Star’s birthday.
Allu Arjun, with his commanding screen presence, is once again set to dominate the silver screen with this most-awaited pan-Indian cinematic sequel. His larger-than-life portrayal in ‘Pushpa: The Rule’ will be a defining moment in Telugu cinema as well as Indian cinema. Joining him is Fahadh Faasil, embodying the very essence of vengeance in this epic tale.
‘Pushpa: The Rule’ boasts a powerhouse team, featuring the electrifying music of Devi Sri Prasad and the breathtaking visuals captured by cinematographer Mireslow Kuba Brozek. S Rama Krishna and N Monica’s production design promises to create a world that seamlessly blends grandeur with grit.