காஞ்சனா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஸ்ரீ கிரின் புரோடக்ஷன்ஸ் சார்பாக M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் இத்திரைப்படத்திற்காக முதன்முறையாக முறையே வாள் சண்டை பயற்சி மேற்கொண்டுவருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா கதாநாயகியாகவும் நடிக்க, நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்ராஜா காமராஜ், RJ ப்ளேட் சங்கர், RJ மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.