
டொராண்டோவில் அதிர வைத்த ‘ஹாஃப்’ – ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் வரலாறு படைத்த முதல் மலையாளப் படம்!
சர்வதேச ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்ற சம்ஜாத் பி.எஸ். இயக்கிய ‘ஹாஃப்’
மலையாள சினிமாவின் தனித்துவமான படைப்புகள் சர்வதேச திரைப்பட விழாக்களில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், அந்தப் பயணத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம். சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாளத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கியப் பிரிவுகளில் ஒன்றான ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் ‘ஹாஃப்’ திரையிடப்பட்டபோது, திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. படத்தின் பல முக்கியமான காட்சிகளுக்கு பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்பு அளித்ததுடன், திரையிடல் முடிந்த பின்னரும் அந்த உற்சாகம் தொடர்ந்தது.
ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் ஆன் சஜீவ் மற்றும் பி.கே. சஜீவ் இணைந்து தயாரித்துள்ள ‘ஹாஃப்’, வழக்கமான திரை அனுபவத்திலிருந்து மாறுபட்ட கதைக்களம், காட்சியமைப்பு மற்றும் தீவிரமான அணுகுமுறையுடன் உருவாகியுள்ளது. இதுவே சர்வதேச பார்வையாளர்களிடம் படத்திற்கு தனி கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
திரையிடலைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி–பதில் நிகழ்ச்சியிலும் ரசிகர்களின் ஆர்வம் வெளிப்பட்டது. இயக்குநர் சம்ஜாத் பி.எஸ்., தயாரிப்பாளர்கள் ஆன் சஜீவ் மற்றும் பி.கே. சஜீவ், நடிகர்கள் ரஞ்சித் சஜீவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜ், இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன், ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
படத்தின் மையக்கரு, உருவாக்கப் பின்னணி, காட்சிமொழி, கதாபாத்திர வடிவமைப்பு, இசை, ஒலி வடிவமைப்பு மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து படக்குழுவினர் பார்வையாளர்களுடன் விரிவாக உரையாடினர்.
‘ஹாஃப்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளும் சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. வெரி ட்ரை யூலிஸ்மேன் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் குறித்து ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைப் பதிவு செய்தனர்.
அதேபோல், படத்தின் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் படத்தின் அனுபவத்தை வலுப்படுத்தியுள்ளது. பப்பீனுவின் ஒளிப்பதிவு, மகேஷ் புவனெந்தின் படத்தொகுப்பு, மிதுன் முகுந்தனின் இசை மற்றும் விஷ்ணு கோவிந்தின் ஒலி வடிவமைப்பு ஆகியவை படத்தின் பதற்றத்தையும் சூழலையும் பார்வையாளர்களுக்கு தீவிரமாகக் கடத்தும் வகையில் அமைந்துள்ளன.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரஞ்சித் சஜீவ் மற்றும் ஐஸ்வர்யா ராஜ் ஆகியோரின் நடிப்பும் TIFF பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேள்வி–பதில் நிகழ்ச்சியில் இருவரும் தங்களது கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் உருவாக்க அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவில் ‘ஹாஃப்’ படத்தின் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், வடஇந்திய வெளியீடு மற்றும் விநியோகத்தை எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஏஏ ஃபிலிம்ஸ் மேற்கொள்கின்றன. மேலும், படத்தின் சர்வதேச விற்பனை உரிமையை ஐரோப்பாவைச் சேர்ந்த ‘Best Friend Forever (BFF)’ நிறுவனம் பெற்றுள்ளது.
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் ‘மிட்நைட் மேட்னஸ்’ பிரிவில் இடம்பெற்ற முதல் மலையாளத் திரைப்படம் என்ற வரலாற்றுப் பதிவுடன், சர்வதேச ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ள உற்சாகமான வரவேற்பும் ‘ஹாஃப்’ படத்தின் உலகளாவிய பயணத்திற்கு புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவின் புதிய குரலையும், வழக்கத்திற்கு மாறான கதை சொல்லும் முறையையும் சர்வதேச திரைப்பட விழா அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள ‘ஹாஃப்’, TIFF மூலம் உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தில் தனது தனித்துவமான இடத்தைப் பதிவு செய்துள்ளது.

‘HALF’ Makes History at Toronto International Film Festival as First Malayalam Film to Enter Midnight Madness
Samjad P.S.-directed film receives an electrifying response from international audiences at TIFF
Malayalam cinema has marked a significant milestone on the international festival circuit with ‘HALF’, directed by Samjad P.S., becoming the first Malayalam film to be screened in the prestigious Midnight Madness section of the Toronto International Film Festival (TIFF).
Produced by Anne Sajeev and P.K. Sajeev under the banner of Fragrant Nature Film Creations, HALF received an enthusiastic response from the Toronto audience. From the moment the screening began, the packed theatre witnessed applause and cheers at several key moments, with the excitement continuing into the post-screening Q&A session.
Known for showcasing bold, intense and distinctive genre-driven cinema, TIFF’s Midnight Madness section provided a fitting platform for HALF, which offers audiences an immersive cinematic experience through its intense storytelling, unconventional visual language and high-energy sequences.
Following the screening, director Samjad P.S., producers Anne Sajeev and P.K. Sajeev, lead actors Ranjith Sajeev and Aiswarya Raj, music composer Mithun Mukundan, and sound designer Vishnu Govind participated in an engaging Q&A session with the audience.
The interaction covered several aspects of the film, including its central theme, filmmaking process, visual language, performances, music and sound design. The cast and crew also shared insights into the making of the film and the creative choices behind its distinctive cinematic approach.
The film’s action sequences emerged as another major talking point among the audience. The action choreography by Very Tri Yulisman received appreciation for adding to the intensity and energy of the film.
The technical craft of HALF also played a key role in creating its immersive atmosphere. Pappinu’s cinematography, Mahesh Bhuvanend’s editing, Mithun Mukundan’s music and Vishnu Govind’s sound design work together to heighten the tension and overall cinematic experience.
The performances of Ranjith Sajeev and Aiswarya Raj in the lead roles also attracted attention from international viewers. During the Q&A, the actors spoke about their respective characters and their experiences of being part of the film.
The film’s international journey is further supported by its global partnerships. Excel Entertainment and AA Films are presenting and distributing HALF across North India, while the film’s international sales rights have been acquired by European sales company Best Friend Forever (BFF).
With its historic selection and screening in TIFF’s Midnight Madness section, HALF has created a new milestone for Malayalam cinema on the international festival stage. The strong response from Toronto audiences has further strengthened the film’s global journey, bringing its distinctive cinematic voice to viewers beyond India.
