‘ரேணிகுண்டா’ படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில். மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி .ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’.
காதல், தமிழ் சினிமா ஆதி காலம் முதல் காதலையும் காதலர்களின் வலியையும், பிரிவையும், இன்பத்தையும் பல படங்களில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒரு காதல் காதலர்களின் குடும்பங்களின் என்னென்ன துயரங்களை உண்டாக்கும். காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளையும்.. கிளைகளையும் தாண்டி வேரோடும்.. ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது. காதலின் இந்த பக்கத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் “ரிங்கா ரிங்கா ரோசா” பாடல் 2021 டிசம்பர் 15 வெளியாகிறது. முதல் பாடல் போலவே ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அருண் பன்னீர்செல்வம். வித்யா பிள்ளை ,ஹர்ஷ் லல்வானி ஜி. சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன் ,நாகேந்திரன் என முற்றிலும் புதுமுகங்களின் ஆக்கிரமிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு ஒளிப்பதிவு அருண் ஜெனா . இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் .இசை -கணேஷ் ராகவேந்திரா. ஏற்கெனவே இவர் ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்தவர். எடிட்டிங் ஆண்டனியின் உதவியாளரான ஜான் ஆபிரகாம் .கலை -முகமது. சண்டைப்பயிற்சி -தினேஷ் .இவர் சண்டை இயக்குநர் ராஜசேகரின் உதவியாளர். நடனம் தஸ்தா.