Sunday, October 6
Shadow

சிபிராஜுக்கென்றே உருவாக்கிய டூயட் பாடல்

சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தினி நடிக்கும் படம் கட்டப்பாவ காணோம். அறிவழகன் உதவியாளர் மணி சேயோன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார். வெண்ட் சினிமா மீடியா தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலை நேற்று சோனி மியூசிக் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

“ஹே பெண்ணே…” என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் சாயலில் உருவாக்கி உள்ளார் இசை அமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. இந்தப் பாடலை சிபிராஜுக்கென்றே சிறப்பாக உருவாக்கினோம் என்கிறார் இயக்குனர் மணி சேயோன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

‛‛இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில் தான் பார்த்து இருக்கிறோம்.

அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது. எனவே அவருக்காக ஒரு சிறந்த காதல் பாடலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே ஹே பெண்ணே….” பாடல் என்கிறார் மணி சேயோன்.

“காதலை முற்றிலும் இந்த காலத்திற்கேற்ற இசையோடு ஒருங்கிணைத்து உருவாக்கியதே “ஹே பெண்ணே…” பாடல். சிட் ஸ்ரீராம் மற்றும் அலிஷா தாமஸ், ஐஸ்வர்யா குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

முழுவதும் புதுமையான பாணியில் பாடல் உருவாகி இருக்கிறது. ” என்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.

Leave a Reply