
தமிழர்களின் உணர்வுக்காக மிக பெரிய போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஹிப் ஹாப் ஆதி திடீர் விலகல் என்று அறிவித்துள்ளார். இதற்க்கு அவர் சொல்லும் காரணம் மிகவும் கேவலமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் மாணவர்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசிவருகிறார். இந்து முஸ்லிம் சகோதர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க தூண்டும் வகையில் பேசிவருகிறார் பெப்சி கோக் போன்ற பானங்கள் அருந்துவது தப்பு என்று சொல்லவது தவறு என்று சொல்லுகிறார். அவர் பேசும் வீடியோ பார்த்தல் மிகவும் கொடுமையாக உள்ளது என்று தான் சொல்லணும் பீட்டாவை எதிக்க கூடாது என்று சொல்லுகிறார்.
கோவை மக்களை மிகவும் அதாவது கோவை மாணவர்களையும் மக்களையும் தவறாக பேசிவருகிறார் மொத்தத்தில் மக்களை திசை திருப்ப பார்க்கிறார். இதுவரை நான் சென்னையில் கலந்து கொள்ளவில்லை அதுனால் சென்னையில் என்ன நடக்குதுன்னு தெரியவில்லை என்று கூறுகிறார். சென்னையில் பல லட்சம் மக்கள் இங்கு போராடி வருகிறார்கள் . இங்கு என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியாது என்று கூறுகிறார். உலகிற்கே தெரியும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அமைதியாக போராடி வருகிறார்கள் . என்பது ஆனால் இவருக்கு தெரியாதாம் .