நான்கு கதைகள் கொண்ட படமாக சமீபத்தில் நமது என்ற படம் வெளிவந்தது. தற்போது நான்கு கதைகள் கொண்ட படமாக மாநகரம் தயாராகி வருகிறது.
வழக்கு எண் ஸ்ரீ, யாருடா மகேஷ் சந்தீப் கிஷன், முண்டாசுபட்டி ராம்தாஸ், சார்லி ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு கிராமங்களிலிருந்த சென்னைக்கு வருகிறார்கள்.
நான்கு பேரும் சென்னை பற்றிய விதவிதமான கற்பனைகளுடன் வருகிறார்கள். நான்குபேரும் தனித்தனியாக வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் நான்கு பேரும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களின் மைய புள்ளியதாக ரெஜினா இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகும் ஹைபர் லிங்க் பாணியிலான கதை.
லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைத்துள்ளார். இந்த மூவருக்கும் இது தான் முதல் படம் இதற்க்கு முன் குறும் படங்கள் இயக்கிய அனுபவத்தில் இந்த மூவர் கூட்டணியில் இந்த படம் ஊருவாக்க்கியுள்ளனர். நேற்று சென்னை தினமான நேற்று தன் படத்தின் டைட்டில்க்கு மரியாதை செய்யும் விதத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டனர். படத்தின் ட்ரைலர் ஆங்கிலபடத்துக்கு நிகராக இருக்கிறது ட்ரைலர் பார்க்கும்போதே படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது .
மாயா படத்தை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. 70 சதவிகித படப்பிடிப்புகள் சென்னையின் தெருக்களில்தான் படமாக்கப்பட்டுள்ளது.