Tuesday, November 5
Shadow

நான் சூர்யா படத்தில் நடிக்கவில்லை ஹன்சிகா திட்டவட்டம் !

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்3’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதி கட்ட வேளையில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா, விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்இ சூர்யா கபாலி இயக்குனர் ரஞ்சித்துடன் கூட்டணி சேருவார் என்றும் அப்புறம் முத்தையா என்று கூறினார்கள் ஆனால் அதிரடியாக விக்னேஷ் சிவன் என்று அறிவித்தார்.இந்த இருவரின் கூட்டணியின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக முதலில் நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. அதன்பின்னர் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் ஹன்சிகாவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த செய்தியை ஹன்சிகா முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிப்பதற்காக என்னை யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தி மட்டும்தான். இந்த வதந்தியை உடனே நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால், சூர்யா படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply