
ஒன்லி ஹீரோ என்று பிடிவாதம் பிடித்த வடிவேலு மீண்டும் காமெடியில் களம் இறங்குகிறார். ஹீரோ தொடர் தோல்வி இனி இந்த வேஷம் எடுபடாது என்று புரிந்து கொண்ட வடிவேலு மீண்டும் நமக்கு எதுவருமோ அதை செய்வோம் என்று எல்லோருடன் காமெடி யில் பயணிப்போம் என்று முதலில் கத்தி சண்டையில் ஆரம்பித்த வடிவேலு இப்ப இளம் நடிகர் ஜி.வி.பிரகஷ்வுடன் களம் இறங்குகிறார் ,
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு விஷாலின் ‘கத்தி சண்டை’ படத்தின் மூலமாக மீண்டும் காமெடிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நாயகனாக நடித்து வந்த வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்க முடிவு செய்ததை அறிந்தவுடன் ஏராளமான இயக்குனர்கள் தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஜி.வி.பிரகாஷின் புதிய படமொன்றில் நடிக்க வடிவேலு சம்மதம் சொல்லியிருக்கிறார். இதனை உறுதி செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் “வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து ராம்பாலாவின் அடுத்த படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தில் நடிப்பதற்காக பெரிய தொகை ஒன்றை வடிவேலுவுக்கு சம்பளமாக பேசியிருப்பதாகவும், தீபாவளிக்குப் பின் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.