
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட அதிகம் நேசிப்பது ஆன்மிகத்தைதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசும்போது…
நான் ஒரு சினிமா நட்சத்திரம். ஆனால் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விட, நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
பணம், பேர், புகழ் என ஒரு பக்கம் வைத்து மற்றொரு பக்கம் ஆன்மிகத்தை வைத்தால் நான் ஆன்மிகம் பக்கம்தான் போவேன்.
ஆன்மிகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு. அதனால்தான் அந்த பவரை நான் விரும்புகிறேன்.
ஒரு விருந்தாளி நம் வீட்டிற்கு வருகிறார் என்றால் நாம் வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவோம்.
அதுபோல் கடவுள் என்கிற விருந்தாளி வர நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.” என்று பேசினார் சூப்பர் ஸ்டார்.