
சமீபத்தில் நடந்த சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகயேன் கலந்து கொண்டார்.
இதில் சிவா பேசுகையில் ” உண்மையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக உள்ளது, இந்த அமைப்புக்கு ஒரு பெண் தலைவர் என்று சொன்னார்கள் ரொம்ப சந்தோசமாக இருந்தது, மேலும் அழைப்பிதழில் என் பெயருக்கு மேல் மாஸ் ஹீரோ என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
நீங்கள் சொன்னால் ஓகே தான், அதற்காக ரஜினி, கமல் விஜய் அஜித் அந்த அளவு மாஸ் ஹீரோ என்று அர்த்தம் இல்லை, எல்லாருக்கும் பிடிக்கும் படங்களில் நடித்து அந்த பட்டதை கௌரவம் செய்வேன். என்று நான் எடுத்து கொள்கிறேன் என்றார்.