சில படங்கள் ஸ்ரீதிவ்யாவை சறுக்கி விட்டபோதும் மறுபடியும் காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவ தொற என பல படங்களில் நடித்தபடி பரபரப்பான ஓடிக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் கார்த்தியின் காஷ்மோரா படத்தில் முதன்முறையாக வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
அதுபற்றி அவர் கூறுகையில், காஷ்மோராவில் நான் யாமினி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை வழக்கமான பெண்ணாகவே நடித்து வந்த எனக்கு இந்த படத்தில் வெஸ்டர்ன் லுக் கேரக்டர் கிடைத்துள்ளது. படத்தில் நான் தோன்றும் காட்சிகள் நல்ல ஸ்டைலாக இருக்கும். அதன்காரணமாக நானும் அந்த கேரக்டரை உள்வாங்கி ரசித்து நடித்தேன். மேலும், இதே படத்தில் நயன்தாரா ஹிஸ்டாரிக்கல் ட்ராக்கில் நடித்துள்ளார். அந்த வகையில் நான் முதல் பாதியிலும், அவர் இரண்டாவது பாதியிலும் வருவது போல் காஷ்மோரா படத்தின் கதை அமைந்துள்ளது என்கிறார் ஸ்ரீதிவ்யா.