சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து நல்ல படங்கள் அது மட்டும் இல்லாமல் அசிங்கம் கலக்காத காமெடி இரட்டை அர்த்தம் இல்லாமல் இவரின் வசனங்கள் உள்ளதால் பெண்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற காமெடி நடிகர் என்று சொல்லணும். ஜி.வி.பிரகாஷுடன் இவர் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வரும் வியாழனன்று திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் முகநூல் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தை சந்திக்க விரும்புவதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.