காமெடி நடிகராக இருந்து இன்று ஹீரோவாக வெற்றிகரமாக வலம் வரும் நடிகர் என்றால் அது சந்தனாம் காமெடி நடிகராக பலர் வெற்றி பெற்றுள்ளனர் அவர்கள் ஹீரோவாக இதுவரை யாரும் பெரிய வெற்றி பெறவில்லை ஆனால் அதை உடைத்தவர் சந்தானம் தொடர்ந்து வெற்றி அதற்க்கு காரணம் நமக்கு என்ன வரும் நம்மை ரசிகர்கள் எப்படி ரசிப்பார்கள் என்று தெரிந்து இருப்பது அவரின் வெற்றிக்கு முதல் பரிசு.
தற்போது அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் என்றால் அது சக்கைபோடு ராஜா இந்த படத்தை அவர் உதவியாளர் சீதாராமன் தான் இயக்கியுள்ளார் இந்த படத்தில் முதல் முறையாக விவேக் அவருடன் இணைவது முக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முன்னனி காமெடி நடிகர் இணைந்து நடிப்பது என்பது பெரிய விஷயம் இது சந்தானதுக்கே சாத்தியம் காரணம் அவரின் நடத்தை அதோடு அவர் பிறருக்கு கொடுக்கும் மரியாதை என்றும் சொல்லலாம்.
இவர் மீது தமிழ் சினிமா எந்த அளவுக்கு மரியாதை வைத்து இருக்கு என்பதற்கு ஒரே சாட்சி சக்கைபோடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா என்று தான் சொல்லணும் காரணம் சிம்பு இசையை வெளியிட்டது தனுஷ் என்றால் பாருங்க சந்தானம் படத்துக்கு முதல் முறையாக இசையமைப்பது சந்தானம் அதை வெளியிடுவது தனுஷ் இதில் இருந்து சந்தானம் எந்த ளவுக்கு மரியாதையான ஒரு நடிகர் என்று நம்மக்கு தெரிய வருகிறது
நேற்று இந்த இசை விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது எல்லோரும் வியக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டம் ஒரு பக்கம் மூவரின் ரசிகர்கள் பட்டாளம் ஒரு பக்கம் சினிமா பிரபலங்கள் என்று கோலாகலமாக நடைபெற்றது
இந்த விழாவில் சிம்பு பேசியது நாம் பார்க்கலாம்
நேற்று சென்னையில் நடந்த சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு கலந்து கொண்டு பேசினார், இதில் பல விசயங்களை பற்றி பேசினார்.
குறிப்பாக AAA பட தயாரிப்பாளர் என் மீது தவறு இருந்து இருந்தால் படம் எடுக்கும் போது சொல்லி இருக்கலாம், இல்லை படம் முடிந்து உடனேயாவது சொல்லி இருக்கலாம், அதெல்லாம் விட்டுட்டு 6 மாதம் கழித்து சொல்றாரு, பரவால்ல இருந்தாலும் என் மேல தப்பு இருந்தா என்னைய மன்னிச்சிக்கோங்க என கூறியுள்ளார்.
மேலும் நானும் தனுஷும் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு வளருவோம்னு எனக்கு எப்பயோ தெரியும் என பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் என்னை என்னுடைய ரசிகர்கள் கிட்ட இருந்து மட்டும் எப்படியும் எவனாலும் பிரிக்க முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார்.