Saturday, October 12
Shadow

தன்னுடைய குற்ற உணர்ச்சியால் விஜய்-யை 8 வருடமாக சந்திக்காத பிரபல இயக்குனர்

விஜய் இயக்குனர்களை மிகவும் மதிப்பவர் அவருக்கு மிகவும் பிடித்த இயக்குனர் என்றால் சச்சின் இயக்குனர் ஜான் அனால் ஜான் சச்சின் படம் முடிந்ததும் இதுவரை அவரை சந்திக்கவேயில்லை என்று அவரே ஒரு பெட்டியில் கூறியுள்ளார் .அதன் பிறகு ஒருவர் அவர்தான் பரதன் அவரும் இதே போல் ஒரு விஷயம் நம்மிடம் பகிர்ந்தார் வாங்க பாப்போம் .

விஜய் பைரவா படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் பரதன் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அவர், கில்லி, மதுர படங்களில் திரைக்கதையை அமைக்கும் பணியில் இருந்தேன். அப்போது என் மேல் விஜய்க்கு நம்பிக்கை வந்தது.

ஒருநாள் எஸ்.கே.சிவா இரண்டு வேட கதை சொன்னார். அந்த கதை பிடித்துப்போக, படத்தை இயக்கும் பொறுப்பை எனக்கு தந்தார், அது தான் அழகிய தமிழ்மகன்.

படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடவில்லை.

எவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்தார்கள், அதற்காக அவருக்கு சக்ஸஸ் தரமுடியவில்லை என்ற ஒரு குற்ற உணர்ச்சியில் 8 வருஷமா விஜய்யை சந்திக்கவே இல்லை என மனம் உருகி பேசியுள்ளார் பரதன்.

Leave a Reply