புதுமுகங்கள் என்று சொல்ல முடியாது ஒரு சில படங்கள் நடித்த புது முகங்கள் நடித்த படம் ரம் முற்றிலும் இளையவர்களின் கூட்டணி என்று சொல்லணும் இந்த படத்தி வேலையில்ல பட்டதாரி படத்தில் தனுஷ் தம்பியாக நடித்த ஹரிஹீகேஷ் ,சஞ்சித ஷெட்டி மியா ஜார்ஜ் விவேக் நரேன் அம்ஜத் அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாய் பரத் அறிமுக ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு அறிமுக தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரிப்பில் இசை சூறாவளி அனிருத் இசையில் உருவாகி இருக்கும் படம் ரம்
இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையிள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் படம் சமந்தமான அனைவரும் கலந்து கொண்டனர் படத்தின் மூன்று பாடல்கள் திரையிட்டனர் மூண்டும் முத்துகள் அனிருத் இசை புரட்சியில் மேலும் ஒரு மைல் கல் என்று சொல்லலாம் அதே படத்தின் முனோட்டம் சிறப்பு படத்தை இப்பவே பார்க்க தூண்டும் அளவுக்கு அருமை இதுவும் ஒரு பேய் படம் ஆனால் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் படம், என்று நடிகர் விவேக் கூறினார். இதுவரை பேய் படம் பார்க்காத அனிருத் முதல் பேய் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் பொது பல இடங்களில் கண்ணை மூடி கொண்டு தான் இசையமைத்தேன் அந்தளவுக்கு மிகவும் திரில்ஹாக இருந்தது . பேய் படம் என்றாலே பயம் எனக்கு இதுவரை நான் பேய் படம் பரார்த்து இல்லை ஆனால் இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்று கூறினார் அனிருத் படத்துக்கு மிக பெரியபாலம் பாடல்கள் அது மட்டும் இல்லை கதையும் திரைக்கதையும் என்றும் சொல்லணும் காரணம் இந்த படத்தின் முன்னோட்டம் ஒன்றே அதற்கு சாட்சி
படத்தின் இயக்குனர் சாய் பரத் கனடாவில் சினிமாவை பற்றி படித்து முடித்து படம் எடுக்கவந்துள்ளர். நிச்சயம் வெற்றியை கொடி கட்டுவார் என்று நம்பலாம் அதற்கு காரணம் மூன்று பாடல்களை காட்சியமைத்து இருக்கும் விதம் என்றும் சொல்லலாம் ரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த பானமாக இருக்கும் .