தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர் சமந்தா. அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர்.
தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை என்றால் அது சமந்தா என்று சொல்லலாம் அது மட்டும் இல்லை இவர் நடிக்கும் முக்கால் வாசி படங்கள் வெற்றி படங்கள் தான் சமந்தா தன் வாழ்கையின் வெற்றி ரகசியங்களை ரசிகர்களாகிய உங்களிடம் பகிர்கிறார் .
. அவர் ஆந்திராவில் கோலேச்சி வந்த நேரம் அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா உள்ளிட்ட பல நடிகைகள் தெலுங்கில் நடித்து வந்தனர்.
ஆனபோதும் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு முன்னணி இடத்தில் இருந்தார் அவர். அதன்பிறகு தமிழுக்கு வந்து இங்கேயும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து முன்வரிசை நாயகியாக இருந்து வருகிறார்
மேலும், சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் தனக்காகவே வைத்துக்கொள்ளாமல் தொண்டு நிறுவனம் மூலம் பல நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்து வருகிறார்.
இதுபற்றி சமந்தா கூறுகையில், இறைவன் கொடுத்துள்ள இந்த வாழ்க்கை மிகப் பெரியது. அதிலும் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருப்பது பெருமையான விசயம்.
அதனால் அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்வது சந்தோசமாக உள்ளது. அதோடு, நான் எப்போதுமே நல்லதையே நினைப்பேன்.
யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. மற்றவர்கள் சிறப்பாக நடித்திருந்தால் போன் செய்து பாராட்டுவேன். வாழ்த்துவேன்.
இது எனது இயல்பு. ஒரு படம் தோல்வியடைந்தால் அதை நினைத்து பீல் பண்ண மாட் டேன். அந்த படத்தில் என்னென்ன நல்ல விசயங்கள் உள்ளது என்பதை ஆராய்வேன்.
இப்படி நான் நினைப்பதினால்தான் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியாக அமைந்து வருகிறது. மேலும் என்னைச்சுற்றியிருப்பவர்களை எப்போதுமே சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்பதிலும் நான் கவனமாக இருக்கிறேன்.
அதனால் அவர்களிடம் நிறைய பாசிட்டிவ் சிந்தனைகளை விதைக்கிறேன். இதனால் அவர்கள் சோர்வாக இருந்தாலும் உற்சாகமாகி விடுகிறார்கள் என்கிறார் சமந்தா.